புதன், 24 ஜூலை, 2024

பட்ஜெட் எதிரொலி – சட்டென சரிந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

 

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-2025-ல் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைந்துள்ளது. இந்த பட்ஜெட்டே சில மாநிலங்களுக்காகதான் என மக்களிடையும், அரசியல் வட்டாரங்களிடையும் கூறப்பட்டு வரும்நிலையில், தங்கம் விலைக்குறைவு  பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி இன்று காலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ. 260 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் ரூ.6550க்கும், சவரனுக்கு ரூ.2,080 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக ரூ.3.50 குறைந்து ஒரு கிராம் ரூ.92.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

23 3 24 

source https://news7tamil.live/the-echo-of-the-reduction-in-customs-duties-the-price-of-gold-fell-to-an-unprecedented-level.html