செவ்வாய், 23 ஜூலை, 2024

உணவின் வகைகளை எழுதி வைக்க வேண்டும், ஆனால், உரிமையாளர்களின் பெயர்களை எழுதி வைக்கக் கூடாது”

 Kanwar

கன்வார் யாத்திரை (Express file photo)

உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களைக் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும் என்ற காவல்துறை உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

இந்த உத்தரவில்,  “பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் உணவின் வகைகளை எழுதி வைக்க வேண்டும், ஆனால், உரிமையாளர்களின் பெயர்களை எழுதி வைக்கக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த மாத தொடக்கத்தில், முசாபர்நகர் எம்.எல்.ஏ-வும், உத்தரபிரதேச அரசின் இணை அமைச்சருமான (சுயேச்சைப் பொறுப்பு) கபில்தேவ் அகர்வால் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தினார். முஸ்லிம்கள் அப்பகுதியில் வியாபாரம் செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், மோதல் ஏற்படாமல் இருக்க இந்து கடவுள்கள் அல்லது தெய்வங்களின் பெயரை தங்கள் கடைகளுக்கு வைக்க வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார்.

கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களைக் எழுதி வைக்க வேண்டும் என உ.பி காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, உத்தரபிரதேச அரசு ஜூலை 19-ம் தேதி மாநிலம் முழுவதும் இந்த உத்தரவை நீட்டித்தது. உத்தரகாண்ட்டின் ஹரித்வாரும் இதேபோன்ற உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என பா.ஜ.க கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களைக் எழுதி வைக்க வேண்டும் என்ற காவல்துறை உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

source https://tamil.indianexpress.com/viral/supreme-court-kanwar-yatra-route-shop-owner-name-show-order-stay-6594001