/indian-express-tamil/media/media_files/yz1QO8CCPamPKKg5cBFw.jpg)
ராஷ்டிரபதி பவனில் உள்ள மிக முக்கியமான இரண்டு அரங்குகளின் பெயர்களை மாற்றுவதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு வியாழக்கிழமை அறிவித்தார்.
அதன்படி இனி, தர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால் முறையே கணதந்திர மண்டபம் (Ganatantra) மற்றும் அசோக் மண்டபம் (Ashok Mandap) என அழைக்கப்படும்.
தேசிய விருதுகள் வழங்குதல் போன்ற முக்கிய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடக்கும்.
அதேபோல் அசோக் ஹால் மன்னர் அசோக சக்கரவர்த்தியின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைப்பு மற்றும் அமைதியை குறிக்கிறது.
மேலும் கணதந்திரா என்ற சொல்லும் இந்திய இலக்கியங்களில் பெரிதளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில், வரலாற்று சிறப்புமிக்க முகலாய தோட்டம் சீசனுக்காக பொதுமக்களுக்கு திறக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக அம்ரித் உத்யன் என்ற “பொதுப் பெயரை” பெற்றது. அதாவது, சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்று கொண்டாடுவதை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராஷ்டிரபதி பவன் தோட்டங்களுக்கு அம்ரித் உத்யன் என்று ஒரு பொதுவான பெயரை சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/rashtrapati-bhavan-renames-durbar-hall-ashok-hall-as-ganatantra-mandap-ashok-mandap-6696118