செவ்வாய், 1 அக்டோபர், 2024

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டம்: கேரளா சென்று தமிழக அரசுக் குழு ஆய்வு

 college students cutn

புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் துறை ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு கேரளா சென்றது. அங்கு அவர்கள் நோர்கா திட்டத்தின் கீழ் செயல்படும் மையத்தை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக கேரளா அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வு செய்தனர்.  

குடியுரிமை பெறாத கேரள மக்கள் விவகாரத் துறையின் செயலாளர் கே.வாசுகி மற்றும் நோர்கா ரூட்ஸ் தலைமைச் செயல் அதிகாரி அஜித் கொளச்சேரி ஆகியோருடன் தமிழகக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். 

திட்டத்தின் மூலம் செய்யப்படும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து விளக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது. 

இக்கலந்துரையாடலின் போது, ​​புலம்பெயர்ந்தோருக்கான நலத்திட்டங்களில் பரஸ்பரம் ஒத்துழைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-delegation-to-study-work-of-non-resident-keralites-association-7227587