பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) நடவடிக்கையை கண்டித்தும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் ம. சுரேஷ் வேதநாயகம் மற்றும் பொதுச் செயலாளர் மு. அசீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அண்ணா பல்கழைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) நடவடிக்கையை கண்டித்தும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நாளை (01.02.2025) மாலை 4 மணியளவில், மன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துரிமையை காப்பாற்றவும் நமது பத்திரிகை சகோதரர்களுக்கு தோள் கொடுக்கவும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைக்கிறோம்.” பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முன்னதாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள், சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதே போல, சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினரை சந்தித்து புகார் அளித்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-press-club-announced-demonstrate-and-condemns-sit-in-anna-university-sexual-assault-case-8679552