ஞாயிறு, 12 ஜனவரி, 2025

எச்.எம்.பி.வி தொற்று பாதித்தோர் இல்லை”- இராஜாஜி மருத்துவமனை முதன்மையர் தகவல்

 மதுரை

எச்.எம்.பி.வி தொற்று பாதித்தோர் இல்லை

சீனாவில் அண்மையில் புதிதாகக் கண்டறியப்பட்ட எச்எம்பிவி தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். இந்தத் தொற்று சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது.

இந்த நிலையில் சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருவர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை என மதுரை அரசு மருத்துவமனை அரசு மருத்துமனை முதன்மையர் இல.அருள் சுந்தரேஷ்குமார் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் இல. அருள் சுந்தரேஷ்குமார் 
"மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சாதாரண சளி, காய்ச்சல் பாதிப்புடன் கூடிய நோயாளிகள் தான் அதிகம் வருகின்றனர்.

இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது வரை எச்எம்பிவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை. இந்தத் தொற்றால் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை".

காய்ச்சல், லேசான மூச்சுத்திணறல் மட்டுமே ஏற்படும். அதையும் சிகிச்சையின் மூலம் எளிதாக குணப்படுத்த இயலும். எனவே, இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

எச்எம்பிவி தொற்று முன்னெச்சரிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதை முறையாகப் பின்பற்றினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது" என தெரிவித்தார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/there-is-no-hmpv-affected-people-madurai-govt-hospital-dean-information-8611593