சனி, 4 ஜனவரி, 2025

சீனாவில் வேகமாக பரவி வரும் HMPV வைரஸ்

 

சீனாவில் வேகமாக பரவி வரும் HMPV வைரஸ் 3/1/25

சீனாவில் மனித மெட்டாப் நியூமோ வைரஸ் (HMPV) தொற்று வேகமாக பரவி வருகிறது.

கோவிட் தொற்றை தொடர்ந்து தற்போது சீனாவில்  மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக வைரஸ் பரவலால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுகின்றன. HMPV, இன்ஃப்ளூயன்ஸா A, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 போன்ற பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் இந்த சுவாச நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். சீனாவில், HMPV, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இடையேயும், குறிப்பாக வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

சுவாச நோய்கள் அதிகரித்து வரும் போதிலும், சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார அமைப்போ (WHO) அதிகாரபூர்வமாக இன்னும் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் சீன அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து பாதிப்புகளை கண்காணித்து வருகிறது.

https://x.com/COVID19_disease/status/1874481684122607783

HMPV என்றால் என்ன?

HMPV என்பது respiratory syncytial virus (RSV), மீசிலெஸ், மம்ஸ் போன் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. HMPV என்பது சுவாச தொற்றுநோய் வைரஸ் ஆகும். இது மேல் மற்றும் கீழ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் அனைத்து வயதினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் முதன்முதலாக 2001-ல் கண்டறியப்பட்டது.

HMPV இன் அறிகுறிகள் என்ன?

HMPV இன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். கடுமையாகும் போது
மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கலாம்.

HMPV எவ்வாறு பரவுகிறது?

மற்ற வைரஸ்களைப் போலவே மனித மெட்டாப் நியூமோ வைரஸும் பரவுகிறது. இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது. கைக்குலுக்குதல் மற்றும் தொடுதல் மூலமும் பரவுகிறது. சுத்தமற்ற பகுதிகளில் கையை வைத்துவிட்டு பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் பரவுகிறது.

இந்த வைரஸால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உடையவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர்.

HMPVஐ எவ்வாறு தடுப்பது?

குறைந்தது 20 விநாடிகள் சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும். கைக்கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். நாம் அடிக்கடி தொடும் கதவு கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

HMPVக்கு சிகிச்சை அல்லது தடுப்பூசி உள்ளதா?

இந்த வைரஸுக்கு சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை.

source https://news7tamil.live/hmpv-virus-spreading-rapidly-in-china-hospitals-overflowing-what-are-the-symptoms.html