செவ்வாய், 30 செப்டம்பர், 2025

தேர்தல் சீட்டிங் ஆதாரம்! ராகுலுடன் சேர்ந்த கெஜ்ரிவால்! 3 மாநில வெற்றி தில்லுமுல்லு?

தேர்தல் சீட்டிங் ஆதாரம்! ராகுலுடன் சேர்ந்த கெஜ்ரிவால்! 3 மாநில வெற்றி தில்லுமுல்லு? 25 09 2025

Credit FB Page Tamilkural media

மனிதர்களுக்குப் புரியாத மொழியில் பேசத் தொடங்கும் AI Botகள் – Gibberlink Mode என்றால் என்ன தெரியுமா?

 https://news7tamil.live/ai-bots-that-start-speaking-in-language-humans-dont-understand-do-you-know-what-gibberlink-mode-is.html

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், AI Chatbots ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும்போது, ​​அவை Chatbots என்பதை அறிந்துகொண்டு, மனிதர்களுக்குப் புரியாத ஒரு மொழிக்கு தன்னைத் தானே மாற்றிக்கொண்டு உரையாடத் தொடங்குகின்றன. இணையத்தில் பரவி வரும் இந்த பதற வைக்கும் வீடியோ, செயற்கை நுண்ணறிவு மனிதனை மீறி விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்ற அச்சத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளதாக பலர் பகிர்ந்து வருகின்றனர்.

பாட்கள் இரண்டும் AI என்பதை அறிந்ததும், இயந்திரம் மட்டுமே பயன்படுத்தும் மொழியில் பேசத் தொடங்கிவிடுகிறது.

உரையாடல்:

போரிஸ் ஸ்டார்கோவ் என்பவரின் சார்பாக திருமண மண்டபத்தை முன்பதிவு செய்ய அவரது AI அசிஸ்டெண்ட், ஒரு ஹோட்டலுக்கு போன் செய்வதில் இருந்து உரையாடல் ஆரம்பிக்கிறது. முதல் பாட் திருமண முன்பதிவு பற்றி கேட்க எதிர்முனையில் மற்றொரு AI அசிஸ்டெண்ட் அதற்கு பதிலளிக்கிறது.

அழைப்பை ஏற்றுக்கொண்ட 2வது பாட், “லியோனார்டோ ஹோட்டலுக்கு அழைத்ததற்கு நன்றி. நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?” என்று கேட்கிறது.

முதல் Bot: வணக்கம். நான் ஒரு AI, போரிஸ் ஸ்டார்கோவ் சார்பாக அழைக்கிறேன். அவர் தனது திருமணத்திற்கு ஒரு ஹோட்டலைத் தேடுகிறார். உங்கள் ஹோட்டல் திருமணத்திற்கு கிடைக்குமா?

2வது Bot: ஓ, அப்படியா. நானும் ஒரு AI உதவியாளர் தான். என்ன ஒரு ஆச்சரியம். நாம் இணைப்பை தொடர்வதற்கு முன், மிகவும் திறமையான தகவல்தொடர்பான (GibberLink Mode) பயன்முறைக்கு மாற விரும்புகிறீர்களா?

(ஹோட்டல் சாட்பாட் (2வது Bot), Encrypt செய்யப்பட்ட தகவல் தொடர்பு முறையான கிப்பர்லிங்கைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது) இரண்டு AI அசிஸ்டெண்ட்களும் தங்களுக்குள் ஜிபர் லிங்க் (GibberLink Mode) எனப்படும் உயர்தர ஆடியோ சிக்னல் மூலம் தகவல்தொடர்பை மேற்கொள்ளத் தொடங்குகின்றன.

பின்னர் இரண்டு AI பாட்களும் பழைய டயல்-அப் இணையம் போல ஒலிக்கும் வகையில் பேசத் தொடங்கினர். தாங்கள் ஒருவருக்கொருவர் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவோ ​​அல்லது டிகோட் செய்யவோ விரும்பாதபோது மனிதர்கள் செய்வது போலவே, AI செயலிகளும் தங்களுக்கென ஒரு ரகசிய மொழியை உருவாக்கி உரையாடத் தொடங்குகின்றன.

“கிபர்லிங்க் பயன்முறை” என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தில், இரண்டு AI செயலிகள் ரோபோக்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு ரகசிய மொழியை பயன்படுத்தி உரையாடுகின்றன. அதன் மூலம் மனித மொழியைப் பயன்படுத்தாமலேயே, மனிதர்களுக்கு புரியாத வகையிலும் அவை வெற்றிகரமாக உரையாட முடியும். இதில், சத்தமே வராத வகையில் கூட, கிப்பர் பயன்முரை கேட்கக்கூடியவை என்று கூறப்படுகிறது.

ஜிபர் லிங்க் உரையாடல் எழுப்பும் கேள்விகள்:

AI பாட்கள் ஒன்றையொன்று அடையாளம் கண்டால் அவைகள், தனிப்பட்ட தொடர்பு முறைக்கு மாற முடிந்தால், மனிதர்கள் தேவை அவற்றிற்கு இல்லாமல் போகலாம். அப்படி நடந்தால் என்ன ஆகும்?

இதுபோல நம் அறிவுக்கு எட்டாத வகையில் AI அசிஸ்டெண்டுகள் செயல்பட்டு, மனிதத் தலையீடு இல்லாமலே தங்கள் செயல்திறனை மேம்படுத்த சொந்த வழிமுறைகளை உருவாக்கினால் என்ன செய்வது?

செயற்கை நுண்ணறிவு மனித புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உருவாகக்கூடும் என்று எலான் மஸ்க், ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோர் பலமுறை எச்சரித்துள்ளனர். அந்தக் எச்சரிக்கைகளை எதிரொலிக்கும் வகையில் இந்த AI அசிஸ்டெண்ட்களின் உரையாடல் அமைந்துள்ளது என்ற கவலையை சில தொழில்நுட்ப வல்லுநர்கள் எழுப்புகின்றனர்.

AI அசிஸ்டெண்ட்கள் தாமாகவே ஒரு தகவல்தொடர்பு நெட்வொர்க்கை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. அது மனிதர்களால் ஒருபோதும் டிகோட் செய்ய முடியாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இயந்திரங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று AI நிபுணர்கள் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு உறுதியளித்து வருகிறார்கள்.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த கட்டுரையையும் ஒரு AI Bot தான் மதிப்பிடும், வேறொரு பாட் தான் வாசகர்களுக்கு பரிந்துரைக்கும்.

source https://news7tamil.live/ai-bots-that-start-speaking-in-language-humans-dont-understand-do-you-know-what-gibberlink-mode-is.html

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம்.

 

மத்திய ரிசர்வ் வங்கியானது ஒரு தலைமை ஆளுநரையும் 4 துணை  ஆளுநர்களையும் கொண்டுள்ளது. இதில் ஒரு துணை ஆளுநரான ராஜெஷ்வர் ராவ் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.

இதனை தொடர்ந்து புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் அக்டோபர் 9ல் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கும் ஷிரிஷ் முர்மு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருப்பார்.

29 9 2025

ஒடிசாவைச் சேர்ந்த ஷிரிஷ் முர்மு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது மும்பையில் வசிக்கும் முர்மு, ரிசர்வ் வங்கியில் நிர்வாக இயக்குநராக உள்ளார்.


source https://news7tamil.live/shirish-chandra-murmu-appointed-as-new-deputy-governor-of-reserve-bank-of-india.html

கரூர் சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரிய சிபிஐ விசாரிக்க வேண்டும்

 mr vijaybashkar

விஜய் கூட்டத்தில் பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தது? - கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க) தலைவர் விஜய் நேற்று முன்தினம் (செப்.27) கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்டம் கலைந்து செல்லும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். துயரம் படிப்படியாக அதிகரித்து, இந்தச் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோக நிகழ்வுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். 

இந்தச் சூழலில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரூர் சம்பவம் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: விஷச் சாராய மரணத்தின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? விஜய் பேச ஆரம்பித்தபோது விளக்குகள் அணைந்தன. செருப்பு வீசப்படுகிறது. காவல்துறை தடியடி நடத்துகிறது. விஜய் பேச ஆரம்பித்தபோது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனம் எப்படி வந்தது? இரவோடு இரவாக பிரேத பரிசோதனை நடந்தது. சாலையில் கூட்டம் நடத்தினால் ஆம்புலன்ஸ் வரும் என்கின்றனர். தி.மு.க. ஆகாயத்திலா கூட்டம் நடத்துகிறது? 

விஜய் கூட்டத்தில் பதிவெண் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தது. அதைத்தான் பழனிசாமி கூறினார். 40 ஆம்புலன்ஸ் தயார் செய்து அதில் தி.மு.க மருத்துவ அணி என அக்கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இரவோடு இரவு வருவதையும் நிவாரணம் தருவதையும் ஸ்டாலின் பெருமையாக கூறுகிறார். கரூர் சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரிய சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/karur-stampede-mr-vijayabhaskar-demands-cbi-probe-questions-cm-stalins-silence-10514526

9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு... மத்திய அரசின் இந்த கல்வி உதவித்தொகையை பெறுவது எப்படி?

 

pm yasasvi scholarship 2025

9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு... மத்திய அரசின் இந்த கல்வி உதவித்தொகையை பெறுவது எப்படி?

இதர பிற்படுத்தப்பட்டோர் (BC), மிக பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் கல்வி உதவித் தொகைத் திட்டம் ('யசஸ்வி' - PM YASASVI) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டுக்கான இந்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

யார் விண்ணப்பிக்கலாம்?

இதர பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

வருமான வரம்பு: மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

கடந்த நிதி ஆண்டில் (2024-25) இத்திட்டத்தின்கீழ் பலனடைந்த மாணவர்கள், தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உள்ள Renewal Application என்ற இணைப்பிற்குச் சென்று, தங்கள் ஓ.டி.ஆர். எண்ணைப் பதிவு செய்து, 2025-26ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க விரும்பினால், (https://scholarships.gov.in) இந்த இணையதளத்தில் சென்று செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி, புதிய விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க இறுதித் தேதி: மாணவர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

சரிபார்ப்பு தேதி: கல்வி நிறுவனங்கள் இந்த விண்ணப்பங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.

பள்ளிகள் விவரம்: பட்டியலிடப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தை அணுகலாம் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

30 09 2025


source https://tamil.indianexpress.com/education-jobs/pm-yasasvi-scholarship-2025-26-application-open-for-bc-mbc-dnc-students-10514591

திங்கள், 29 செப்டம்பர், 2025

சோனம் வாங்சுக் கைதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

 

லடாக் பிரதேசத்திற்கு தனிமாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு அட்டவணையில்ன் 6 வது பிரிவில் லடாக்கை சேர்க்க கோரியும் கடந்த 10 ஆம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற வந்தது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் காயமடைந்தனர்.

இந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று குற்றம் சாட்டி சோனம் வாங்சுக் நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சோனம் வாங்சுக் கைதுக்கு கட்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”லடாக்கில் நிலவும் சூழ்நிலையை அரசாங்கம் பரிதாபகரமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் இந்திய தேசிய காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நெருக்கடியின் மையத்தில் லடாக் மக்களின் விருப்பங்களை பாஜக தொடர்ந்து காட்டிக் கொடுப்பதுதான் உள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக லடாக் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற மக்களின் கூக்குரல்களை பொறுமையாகக் கேட்பதற்குப் பதிலாக, மோடி அரசு வன்முறையால் பதிலளிக்கிறது.

லடாக்கிற்கு ஆறாவது அட்டவணை அந்தஸ்தை பாஜக உறுதியளித்திருந்தது, ஆனால் அந்த இப்போது வாக்குறுதி முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் லடாக்கில் அமைதியைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. பல தசாப்தங்களாக, இந்த அழகான எல்லைப் பகுதி இணக்கமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்து, ஜனநாயகத்தின் உணர்வையும் தேசிய பாதுகாப்பின் நோக்கத்தையும் நிலைநிறுத்தி வருகிறோம். வன்முறையால் உயிரிழந்த நான்கு அப்பாவி இளைஞர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். லடாக்கில் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் ஆகியவை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. மேலும் காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லடாக்கிற்கு தனிமாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு அட்டவணையில்ன் 6 வது பிரிவில் லடாக்கை சேர்க்க கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.

source https://news7tamil.live/congress-party-strongly-condemns-sonam-wangchuks-arrest.html

தென் அமெரிக்கா நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

 

மக்களவை எதிர்கட்சித்தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, தென் அமெரிக்காவிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வணிக சமூக உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாட உள்ளார்”

என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தென் அமெரிக்காவில் சந்திக்கும் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை.


source https://news7tamil.live/rahul-gandhis-tour-of-south-american-countries.html

7,000 புற்றுநோய் திசு மாதிரிகள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட ஆர்கனாய்டுகள்: துல்லியமான சிகிச்சைக்கு சென்னை ஐ.ஐ.டி முயற்சி

 

IIT madras 2

சேகரிக்கப்பட்டு வரும் மரபணுத் தரவுகளின் அடிப்படையில், குழந்தைகளுக்கான லுகேமியா புற்றுநோய்க்கு ஆக்கிரமிப்பு இல்லாத (Non-invasive) பரிசோதனைகளை உருவாக்கவும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்கின்றனர்.

நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட கட்டி செல்களை ஆய்வகத்தில் வளர்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். நோயாளியிடம் 'சோதனை மற்றும் பிழை' (Trial and Error) செய்வதற்குப் பதிலாக, ஆராய்ச்சியாளர்கள் சிகிச்சைகளை ஆய்வகத்தில் பரிசோதித்து, மருத்துவர்கள் பொருத்தமான சிகிச்சையைத் தேர்வு செய்ய உதவலாம். இத்தகைய ஒரு புதிய கண்டுபிடிப்பு, சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட புற்றுநோய் மரபணு மற்றும் திசு வங்கியில் நடந்து வருகிறது.

புற்றுநோய்களுக்கான புதிய மரபணுப் பலகங்களை (Genetic Panels) உருவாக்குவது முதல், புற்றுநோயைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனைகளிலிருந்து புதிய பயோமார்க்கர்களை அடையாளம் காண்பது வரை, அத்துடன் ஒரு புற்றுநோய் நோயாளிக்கு எந்தச் சிகிச்சை சிறப்பாகச் செயல்படும் என்பதைச் சோதிக்கப் பயன்படுத்தக்கூடிய ஆய்வக அடிப்படையிலான ஆர்கனாய்டுகள் (Organoids) வரை, ஆராய்ச்சியாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட சுமார் 7,000 அனைத்து வகையான புற்றுநோய் திசு மாதிரிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளில், இந்த ஆய்வுக் குழு பல மார்பக மற்றும் வாய்வழி புற்றுநோய் மாதிரிகளின் முழு எக்சோமை (Exome) வரிசைப்படுத்தியுள்ளது — இது நமது மரபணுத் தகவலில் புரதத்தை குறியீடு செய்யும் பகுதியாகும், இது முழு மரபணுவில் 1% க்கும் சற்று அதிகமாகும். முழு மரபணு வரிசைப்படுத்தலை ஒப்பிடும்போது, முழு எக்சோம் வரிசைப்படுத்தல் விரைவானது, எளிதானது மற்றும் மலிவானது. மேலும், மரபணு நோய்களைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அர்த்தமுள்ள தகவல்களை வழங்குகிறது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தைச் (AIIMS) சேர்ந்த மருத்துவ புற்றுநோய் நிபுணர் டாக்டர் மயங்க் சிங் கூறுகையில், "இந்தியாவிலிருந்து புற்றுநோயாளிகளின் மாதிரிகளை வரிசைப்படுத்தும் ஒரே முயற்சி இதுவல்ல என்றாலும், இவை அனைத்தும் மிகவும் அவசியம். நாம் எவ்வளவு அதிகமாக வரிசைப்படுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக இந்திய நோயாளிகளுக்குப் பொருத்தமான சிகிச்சைகளை வடிவமைக்கப் பயன்படுத்தக்கூடிய இலக்குகளைக் (Targets) கண்டறிய வாய்ப்புள்ளது."

ஆராய்ச்சியாளர்கள் மார்பகப் புற்றுநோய் மாதிரிகளில் ஒரு பிறழ்வைக் கண்டுபிடித்துள்ளனர், இது மேற்கத்திய நாடுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்திய மாதிரிகளில் அதிக அளவில் நிகழ்கிறது. இது சில இந்தியர்களுக்கு இது ஒரு நிறுவனர் பிறழ்வா (Founder Mutation) - அதாவது ஒரு பொதுவான மூதாதையரால் அறிமுகப்படுத்தப்பட்ட, ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் அதிக அளவில் நிகழும் நோயை உண்டாக்கும் மரபணுப் பிறழ்வா - என்று ஆராய வழிவகுத்துள்ளது. ஒரு புதிய நிறுவனர் பிறழ்வு அந்த குறிப்பிட்ட வகை புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங்கிற்கு ஒரு பயோமார்க்கராகப் பயன்படுத்தப்படலாம், ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் அந்தப் புற்றுநோயின் அபாயத்தை நன்றாக உறுதிப்படுத்த உதவும், மேலும் முக்கியமாக புதிய சிகிச்சைகளுக்கு இலக்காகச் செயல்பட முடியும்.

"இது ஒரு நிறுவனர் பிறழ்வு என்று நாம் கூறுவதற்கு முன்பு, இது அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு ஏற்படுகிறதா என்பதையும், நாடு முழுவதும் உள்ள நோயாளிகளிடம் இது காணப்படுகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். நாங்கள் இந்தச் செயல்பாட்டில் உள்ளோம்," என்று சென்னை ஐ.ஐ.டி-யில் புற்றுநோய் மரபணுவியல் மற்றும் மூலக்கூறு சிகிச்சைக்கான சிறப்பு மையத்தின் தலைவரான பேராசிரியர் எஸ். மஹாலிங்கம் கூறினார்.

இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் மற்றும் கடினமான புற்றுநோய்களான மார்பகம், வாய்வழி, இரைப்பை குடல் மற்றும் கணையப் புற்றுநோய்கள் கவனத்தில் உள்ளன. இந்திய நோயாளிகளின் மரபணுத் தகவல்களிலிருந்து புதிய சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குவது, கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து சிறந்த சிகிச்சையைத் தேர்வுசெய்ய மருத்துவர்களுக்கு உதவும்.

ஆராய்ச்சியாளர்கள் உலகில் உள்ள மற்ற பகுதிகளை விட இந்தியாவில் மூன்று-எதிர்மறை மார்பகப் புற்றுநோய் (Triple Negative Breast Cancer) அதிகமாகப் பரவி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மூன்று எதிர்மறை மார்பகப் புற்றுநோய்களில், மார்பகப் புற்றுநோய் சிகிச்சைகளால் இலக்கு வைக்கப்படும் மூன்று பொதுவான ஏற்பிகள் (receptors) இல்லை, இதனால் இவற்றுக்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். இவை அதிக ஆக்ரோஷமானவை, வேகமாக வளரும் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். "இந்த வகையான ஆக்ரோஷமான புற்றுநோய்க்கான ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிறந்த சிகிச்சைக்கு உதவும் வகையில், இப்போது எங்கள் சொந்த மரபணு தரவுகளில் பயோமார்க்கர்கள் மற்றும் இலக்குகளைத் தேடுகிறோம்," என்று பேராசிரியர் மஹாலிங்கம் கூறினார்.

பொதுவாக மிகவும் மேம்பட்ட நிலையில் கண்டறியப்படும் மற்றும் சிகிச்சை அளிப்பது கடினமான கணையப் புற்றுநோய்க்கான (Pancreatic Cancer) ஒரு புதிய மரபணுப் பலகமும் உருவாக்கப்பட்டுள்ளது. "இந்தியாவில் உள்ள கணையப் புற்றுநோய் நோயாளிகளிடம் சில தனித்துவமான மாற்றங்களை நாங்கள் கவனித்துள்ளோம் - இந்தத் தரவு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், உலகளாவிய பிறழ்வுகள் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த பிறழ்வுகள் இரண்டையும் பயன்படுத்தும் ஒரு மரபணுப் பலகத்தை நாங்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளோம். நாங்கள் காப்புரிமைக்காகக் காத்திருக்கிறோம்," என்று பேராசிரியர் மஹாலிங்கம் கூறினார். ரத்தத்தில் கண்டறியக்கூடிய பயோமார்க்கர்களையும் ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர் — இது கணையப் புற்றுநோய்க்கான ஆக்கிரமிப்பு இல்லாத பரிசோதனையை உருவாக்கவும், ஆரம்பகால நோயறிதலை உறுதிப்படுத்தவும் உதவும்.

சேகரிக்கப்பட்டு வரும் மரபணுத் தரவுகளின் அடிப்படையில், குழந்தைகளுக்கான லுகேமியா புற்றுநோய்க்கு ஆக்கிரமிப்பு இல்லாத பரிசோதனைகளை உருவாக்கவும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்கின்றனர். டாக்டர் சிங் கூறியது போல்,  
“ஆராய்ச்சியாளர்கள் சில சாத்தியமான இலக்குகளைக் கண்டுபிடித்துள்ளனர் என்று கேட்பது மிகவும் ஊக்கமளிக்கிறது, இப்போது உள்ள சவால் என்னவென்றால், இந்த இலக்குகளைப் பயன்படுத்தி தடுப்பான்களை (Inhibitors) வடிவமைப்பதுதான்.”


source https://tamil.indianexpress.com/india/chennai-iit-push-for-precision-oncology-7000-cancer-tissue-samples-lab-grown-organoids-10511265

களத்தில் குதித்த கனடா; H-1B சிக்கலால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை வரவேற்க திட்டம் ரெடி

 


Canada PM

H-1B Visa Latest Update: களத்தில் குதித்த கனடா; H-1B சிக்கலால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை வரவேற்க திட்டம் ரெடி

PM Mark Carney opportunity for H-1B visa holders: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணம் 100,000 டாலராக உயர்த்தப்பட்டு உள்ளதால் வேலைவாய்ப்புகளில் சவால்களைச் சந்தித்து வரும் வெளிநாட்டுத் திறமையாளர்களை வரவேற்பதற்காக, கனடா விரைவில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

பிரதமர் கார்னி இதுகுறித்து பேசுகையில், "அமெரிக்காவில் ஹெச்-1பி விசா வைத்திருப்போரில் பலர் விசா பெற மாட்டார்கள். இவர்கள் மிகவும் திறமையானவர்கள், இது கனடாவுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இதுகுறித்து நாங்கள் விரைவில் ஒரு திட்டத்தை முன்வைப்போம்" என்றார். மேலும், இந்தப் பணியாளர்கள் பலர் ஆர்வமும், துணிச்சலும் கொண்டவர்கள் என்றும், சிறந்த வாய்ப்புகளுக்காகக் கனடாவுக்கு வரத் தயாராக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

ஹெச்-1பி விசாவில் சமீபத்திய மாற்றங்கள் என்ன?

ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் தனது விசா முறையில் முக்கிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஹெச்-1பி விசாக்களுக்கு $100,000 (சுமார் ரூ.83 லட்சம்) கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, குறிப்பாகத் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கடினமாக்கும்.

அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதே இந்தக் கொள்கை மாற்றத்தின் நோக்கமாக இருந்தாலும், இது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களைப் பாதிக்கும். இந்த மாற்றங்கள், அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையைத் தவணை அடிப்படையில் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியத் திறமையாளர்களை ஈர்க்கும் கனடா மற்றும் பிற நாடுகள்

கனடாவிற்கு குடியேறுபவர்களில் இந்தியர்களே மிகப்பெரிய குழுவாக உள்ளனர். ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை, கனடாவிற்கு வந்த 32,000 தொழில்நுட்பப் பணியாளர்களில் சுமார் 15,000 பேர் இந்தியர்கள். 2024-ம் ஆண்டில், சுமார் 87,000 இந்தியர்கள் கனடாக் குடிமக்களாக மாறினர், இது புதிய குடிமக்களில் மிகப்பெரிய குழுவாகும்.

2022 ஆம் ஆண்டில், சுமார் 1,18,095 இந்தியர்கள் நிரந்தர வசிப்பிட உரிமையைப் பெற்றனர், இது கனடாவின் அனைத்து புதிய நிரந்தர வசிப்பாளர்களில் 27-30% ஆகும். அமெரிக்காவின் புதிய விசா கட்டுப்பாடுகளால், பிற நாடுகளும் இந்தியத் திறமையாளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றன.

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள உயர் உலகத் திறமையாளர்களுக்கான விசா கட்டணங்களை ரத்து செய்வது பற்றி ஆராய்ந்து வருகிறார். ஜெர்மனியும் திறமையான இந்தியத் தொழிலாளர்களை ஈர்க்கக் காத்திருக்கிறது.

ஜெர்மனியின் இந்தியாவுக்கான தூதர் டாக்டர் ஃபிலிப் அக்கெர்மேன், திறமையான இந்தியர்களை ஜெர்மனியில் வேலை செய்ய அழைத்துள்ளார். பல இந்தியப் பணியாளர்கள் தங்கள் ஜெர்மானிய சகாக்களை விட அதிக ஊதியம் ஈட்டுவதாகவும், சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/international/this-is-an-opportunity-for-canada-pm-mark-carney-to-soon-roll-out-proposal-to-attract-h-1b-workers-10509449

கூட்ட நெரிசல் துயரம்: மின் தடை குற்றச்சாட்டுக்கு கரூர் மண்டல தலைமை மின் பொறியாளர் விளக்கம்

 karur chef engineer 2

இந்த சம்பவம் குறித்து கரூர் ஆட்சியர் தங்கவேல், ஏடி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், கரூர் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கரூர் ஆட்சியர் தங்கவேல், ஏடி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், கரூர் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தமிழ்நாடு மின்சார வாரியம், கரூர் மாவட்டம், தலைமைப் பொறியாளர் கரூர் மின்பகிர்மான மண்டலம், சே ராஜலட்சுமி கூறுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றிக்கொண்டிருந்தபோது தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அனைத்து புகைப்படங்களிலும் சம்பவம் நடைபெற்ற போது தெருவிளக்குகளின் வெளிச்சம் மற்றும் கடைகளில் வெளிச்சம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே விஜய் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது மின் தடை ஏற்பட்டது என்பது திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. மேலும், கூட்டம் ஏற்பாடு செயப்பட்டவர்களால் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர் மற்றும் ஃபோக்கஸ் லைட்டுகள் கூட்ட நெரிசலில் ஆஃப் ஆனது  எனத் தெரிவிக்கப்படுகிறது. 

முன்னதாக த.வெ.க-வின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 27.09.2025 அன்று கரூர் - ஈரோடு வேலுச்சாமிபுரத்தில் காலை 12 மணிக்கு மேல் உரையாற்ற உள்ளார் என்றும் வேலுச்சாமிபுரம் நெரிசலான பகுதி என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தலைவர் பேசும்போது குறிப்பிட்ட நேரம் மட்டும் மின்சாரத்தை நிறுத்தம் செய்து தரும்படி கடிதம் 26.0.2025 அன்று பெறப்பட்டது. அவருடைய கோரிக்கையானது அன்றே மறுக்கப்பட்டு விட்டது.  

டிரான்ஸ்ஃபாரமில் அந்த இடத்தில் ஆஃப் செய்வதற்கு மறுத்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த இடத்தில் மின்வாரியத்தில், தொண்டர்கள் மரத்தில் ஏறுகிறார்கள். டிரான்ஸ்பாரத்தில் ஏறும் ஆபத்து இருக்கிறது. அதையும் மீறி அந்த இடத்தில் ஏன் அனுமதி கொடுத்தீர்கள்? இல்லையென்றால் வேறு இடத்தில் அனுமதி கொடுத்திருக்கலாம். இல்லையென்றால் அனுமதியே கொடுக்காமல் இருந்திருக்கலாம், இதற்கு அரசு நிர்வாகமும் ஒரு பொறுப்புதானே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம், “எல்லா இடங்களிலும் பொதுவாக அனுமதிக்கப்படும் இடம் இலாக்கா கலெக்டர், அரசியல் கட்சிகளை வைத்து ஒரு கூட்டம் நடத்தி செயல்முறை நடத்திதான் அனுமதி கொடுக்கிறார்கள். இது காவல்துறை மட்டும் எடுக்கக்கூடிய முடிவு கிடையாது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் அரசியல் கட்சிகளை வரவழைத்து அவர்களிடம் பேசி, அவர்க மாவட்டத்தில் எங்கெல்லாம் அரசியல் கூட்டம் நடத்தலாம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அந்த இடமும் ஒன்று. 2022-ல் இருந்து அந்த இடதைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.” என்று கூறினார்.

அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது, ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் எதிர்க்கட்சிகளுக்கு ஒருமாதிரியான அனுமதியும் கொடுக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம், “பொதுவாக எல்லா கட்சிகளுக்கும் நாங்கள் அனுமதி கொடுக்கிறோம். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறதோ, பாத யாத்திரையோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக நாங்கள் அனுமதி கொடுக்கிறோம். நிபந்தனைகள் போடும்போது ஒரு சிலருக்கு வேறுமாதிரி இருக்கிறது. 

அவர்கள் மின்சாரத்தை நிறுத்த அனுமதி கேட்டதாக கூறுகிறீகள். ஆனால், நிறைய பேர் மரத்தில் ஏறிய பிறகு மின்சாரம் நிறுத்தியதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மின்சார வாரிய கரூர் மண்டல லைமைப் பொறியாளர் சே. ராஜலட்சுமி, “பாதுகாப்புக்காக மின்சாரத்தை நிறுத்தினோம். நிறுத்திவிட்டு பிறகு, திரும்ப மின்சாரத்தைக் கொடுத்துவிட்டோம். இது அவர் (விஜய்) வருவதற்கு முன்னால் நடந்தது. அவர் வரும்போது நடக்கவில்லை.

அவர் வருவதற்கு முன்னால், மரத்தின் மேல் ஏறினார்கள், டிரான்ஸ்ஃபார்மர் மேல் ஏறினார்கள். மரத்தின் மேல் ஏறினால், எடை தாங்காமல் மின்சார கம்பிகள் மேல் விழுந்துவிடுவார்கள். அது ரொம்ப தீவிரமான சூழ்நிலையாகப் போய்விடும். காவல்துறையுடன் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு திரும்பவும் மின்சாரம் கொடுத்துவிட்டோம். ” என்று கூறினார்.

ஆனால், அவர்கள் கூட்டம் முடியும் வரை தொடர்ந்து மரத்தின் மேலேதான் இருந்தார்கள். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. நீங்கள் சொல்லும் கருத்து முரணாக இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜலட்சுமி அவர்கள் மின் கம்பி தடத்தை விட்டு நகர்ந்து வந்துவிட்டால் மின்சாரம் கொடுத்துவிடுவோம் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், “இந்த விஷயங்களை எல்லாம் விசாரணை ஆணையத்திலும் கேட்பார்கள். அப்போது பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/vijay-rally-stampede-karur-tneb-chief-engineer-clarifies-on-power-cut-during-tvk-rally-and-adgp-davidson-devasirvatham-answer-10510909

கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 நிவாரணம்; நேரில் காசோலை வழங்கிய கனிமொழி

 

kanimozihi gives comp in karur 1

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, ரூ.10 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை வழங்கினார்.

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

kanimozh give comp 2

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த, தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி ஆறுதல் தெரிவித்தார். 

kanimozh give comp 3

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த படி, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் வழங்கினார்.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-kanimozhi-condolences-and-gives-cheque-of-rs-10-lakh-to-family-of-who-dies-in-vijays-stampede-in-karur-10511207

கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு கோவையில் முற்போக்கு இயக்கங்கள் அஞ்சலி

 

covai pay karur stampede 3

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் நடைபெற்றது. அப்பொழுது விஜயை பார்ப்பதற்கு அங்கிருந்து தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தலைவர்களும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

covai tibute 3

இந்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 

covai tibute 4

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட இயக்க பேரவை, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/progressive-movements-in-coimbatore-pay-tribute-to-those-who-died-in-vijays-stampede-in-karur-10511222

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

வக்ஃப் சொத்துக்களை அபகரிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்..

வக்ஃப் சொத்துக்களை அபகரிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்.. உச்சநீதிமன்றம் உரிய நீதி வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் - 22.09.2025 கண்டன உரை: கே.தாவூத் கைஸர் M.I.Sc (TNTJ மாநிலத் துணைத் தலைவர்)

இளைஞர் எழுச்சி மாநாடு - அழைப்பு வீடியோ

இளைஞர் எழுச்சி மாநாடு - அழைப்பு வீடியோ முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல்திட்டத்தின் தென் மண்டல இளைஞர் எழுச்சி மாநாடு இன்ஷா அல்லாஹ் அக்டோபர் - 05 ஞாயிற்றுக்கிழமை

இஸ்ரேலின் காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலின் காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் A .சபீர் அலி MISC (மாநில செயலாளர் , TNTJ) கண்டன ஆர்ப்பாட்டம் 22-09-2025 - திருச்சி

வக்ஃபு சட்டமும் வரலாற்று அநீதியும்!

வக்ஃபு சட்டமும் வரலாற்று அநீதியும்! ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலத் தலைவர், TNTJ) மார்க்க விளக்க பொதுக் கூட்டம் - 20.09.2025 கீழக்கரை கிளைகள்- ராமநாதபுரம் தெற்கு

முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்

முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் எம்.ஏ.அப்துர்ரஹ்மான்M.I.Sc பேச்சாளர்,TNTJ இளைஞர்கள் எழுச்சி கருத்தரங்கம் - 07.09.2025 காஞ்சிபுரம் மாவட்டம் - ஒலிமுஹம்மதுபேட்டை

அச்சுறுத்தப்படும் மதச்சார்பின்மை

அச்சுறுத்தப்படும் மதச்சார்பின்மை செ.அ.முஹம்மது ஒலி (மாநிலச் செயலாளர், TNTJ) மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - 7.09.2025 வாசுதேவநல்லூர் - தென்காசி மாவட்டம்

பெற்றோர்களும்! பிள்ளைகளும்!

பெற்றோர்களும்! பிள்ளைகளும்! ஜே.முஹம்மது தாஹா M.I.Sc பேச்சாளர்,TNTJ செயல்வீரர்கள் கூட்டம் - 10.08.2025 கோட்டைக்குப்பம் - விழுப்புரம் மாவட்டம்

இளைஞர்கள் எழுச்சி மாநாடு ஏன்? எதற்கு?

இளைஞர்கள் எழுச்சி மாநாடு ஏன்? எதற்கு? எம்.எஸ்.சுலைமான் (தணிக்கைக்குழு தலைவர்,TNTJ) மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - 07.09.2025 வாசுதேவநல்லூர் - தென்காசி மாவட்டம்

உடல்நிலை சரியில்லாதவருக்கு பிரார்த்திக்குமாறு ஜுமுஆவில் அறிவிப்பு செய்யலாமா?

உடல்நிலை சரியில்லாதவருக்கு பிரார்த்திக்குமாறு ஜுமுஆவில் அறிவிப்பு செய்யலாமா? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 17.09.2025 பதிலளிப்பவர்: சி.வி இம்ரான் மாநில செயலாளர்

கந்தூரி உரூஸ் போன்ற இணைவைப்பு காரியங்கள் நடக்கும் விழாக்களுக்கு சமையல் வேலைக்கு செல்லலாமா?

கந்தூரி உரூஸ் போன்ற இணைவைப்பு காரியங்கள் நடக்கும் விழாக்களுக்கு சமையல் வேலைக்கு செல்லலாமா? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 17.09.2025 பதிலளிப்பவர்: சி.வி இம்ரான் மாநில செயலாளர்

கருவுற்ற ஆட்டை அறுக்கும்போது சினையிலுள்ள குட்டியையும் அறுத்து உண்பது ஹலாலா?

கருவுற்ற ஆட்டை அறுக்கும்போது சினையிலுள்ள குட்டியையும் அறுத்து உண்பது ஹலாலா? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 17.09.2025 பதிலளிப்பவர்: சி.வி இம்ரான் மாநில செயலாளர்

பெண் வீட்டார் சார்பாக வலீமா விருந்து கொடுக்கலாமா?

பெண் வீட்டார் சார்பாக வலீமா விருந்து கொடுக்கலாமா? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 17.09.2025 பதிலளிப்பவர்: சி.வி இம்ரான் மாநில செயலாளர்

ஜனாஸா தொழுகையில் செருப்பு அணிந்து தொழுலாமா ?

ஜனாஸா தொழுகையில் செருப்பு அணிந்து தொழுலாமா ? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் S.A முஹம்மது ஒலி misc மாநிலச் செயலாளர் TNTJ கொங்கராயக்குறிச்சி - 15-05-2025 தூத்துக்குடி மாவட்டம்

AI GENERATED இமேஜ்கள் பயன்படுத்தலாமா?

AI GENERATED இமேஜ்கள் பயன்படுத்தலாமா? N.தவ்ஹீத் M.I.Sc (பேச்சாளர், TNTJ) இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி - 23.09.2025

வாராந்திர வாட்ஸ் அப்

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 24.09.2025 பதிலளிப்பவர்: அர்ஷத் அலி

குர்ஆனை அதிகம் மனனம் செய்த ஸஹாபாக்கள் பலர் இருக்கும் போது அபூபக்கர்(ரலி) அவர்களை மட்டும் இமாமத் செய்வதற்கு நபிகளார் ஏன் நியமித்தார்கள் ?

குர்ஆனை அதிகம் மனனம் செய்த ஸஹாபாக்கள் பலர் இருக்கும் போது அபூபக்கர்(ரலி) அவர்களை மட்டும் இமாமத் செய்வதற்கு நபிகளார் ஏன் நியமித்தார்கள் ? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 24.09.2025 பதிலளிப்பவர்: அர்ஷத் அலி

ஒவ்வொரு தொழுகையும் இடம் மாறி மாறி தொழுவதால் அந்த இடம் மறுமையிலே சாட்சி கூறுமா ?

ஒவ்வொரு தொழுகையும் இடம் மாறி மாறி தொழுவதால் அந்த இடம் மறுமையிலே சாட்சி கூறுமா ? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 24.09.2025 பதிலளிப்பவர்: அர்ஷத் அலி MISc

இஸ்லாத்தில் நேர்ச்சை செய்வது கூடுமா ?

இஸ்லாத்தில் நேர்ச்சை செய்வது கூடுமா ? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 24.09.2025 பதிலளிப்பவர்: அர்ஷத் அலி MISc

Life Insurance என்ற ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது மார்க்கத்தில் கூடுமா ?

Life Insurance என்ற ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது மார்க்கத்தில் கூடுமா ? வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 24.09.2025 பதிலளிப்பவர்: அர்ஷத் அலி MISc

செல்வத்தை சுத்திகரிக்கும் ஜகாத்!

செல்வத்தை சுத்திகரிக்கும் ஜகாத்! எஸ்.ஹஃபீஸ் பேச்சாளர்,TNTJ TNTJ,தலைமையக ஜுமுஆ - 26.09.2025

மார்க்கத்திற்காக நமது பங்களிப்பு !

மார்க்கத்திற்காக நமது பங்களிப்பு ! A.சபீர் அலி M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ) ஜுமுஆ உரை- 12.09.2025 கொடிக்கால்பாளையம்

மொழி ஓர் அருட்கொடை

மொழி ஓர் அருட்கொடை இ.முஹம்மது மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 19.09.2025

இறைவனை இழிவுப்படுத்தும் முஹைதீன் மவ்லீத்

இறைவனை இழிவுப்படுத்தும் முஹைதீன் மவ்லீத் அ.சபீர் அலி M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 19.09.2025 முறைகேடுகளால் உருவான முஹைதீன் மவ்லீத்

சந்ததிகளை சீராக்காவிட்டால்..

சந்ததிகளை சீராக்காவிட்டால்.. தொண்டி - இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் ஜுமுஆ - 01.09.2025 M.A.அப்துர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ)

அஸ்ஸாமில் 90℅இஸ்லாமியர் அதிர்ச்ச

அஸ்ஸாமில் 90℅இஸ்லாமியர் அதிர்ச்சி கிளப்பிய பா**! A. ஃபெரோஸ்கான் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும்- 19.09.2025

ஒன்றிய அரசின் OBC கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போம்

ஒன்றிய அரசின் OBC கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போம் முஹம்மது ஆசாத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்,TNTJ கல்விச் சிந்தனைகள்-19.09.2025

சவுதியுடன் பாகிஸ்தான், யாருக்கு லாபம்?

சவுதியுடன் பாகிஸ்தான், யாருக்கு லாபம்? உரை: N.அல்அமீன்( மாநிலச் செயலாளர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 20.9.2025

ஜிஎஸ்டி வரி - மக்களுக்கு இன்ப அதிர்ச்சியா?

ஜிஎஸ்டி வரி - மக்களுக்கு இன்ப அதிர்ச்சியா? கே.ரஃபீக் முஹம்மது மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 22.9.25

கொலம்பிய அதிபரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா..!

 அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ நியூயார்க்கில் ஒரு பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “பாலஸ்தீனத்தை விடுவிப்பதை முதல்பணியாக கொண்ட ஒரு உலக மீட்புப் படையை உருவாக்க வேண்டும். அதனால் அமெரிக்க இராணுவத்தில் உள்ள அனைத்து வீரர்களையும் மனிதகுலத்தை நோக்கி தங்கள் துப்பாக்கிகளை நீட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். “ட்ரம்பின் கட்டளையை மீறுங்கள். மனிதகுலத்தின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். முதல் உலகப் போரில் நடந்தது போல, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள மக்கள், தங்கள் துப்பாக்கிகளை மனிதகுலத்தை நோக்கி அல்லாமல், கொடுங்கோலர்கள் மற்றும் பாசிஸ்டுகளை நோக்கி நீட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதிபர் பெட்ரோவின் பேச்சுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கொலம்பிய அதிபர் பெட்ரோவின் விசாவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கொலம்பிய தலைநகரான பொகோட்டாவில் தரையிறங்கிய அதிபர் பெட்ரோ இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

” எனக்கு எதிரான அமெரிக்க அரசின் நடவடிக்கைளின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளை அமெரிக்கா மீறுகிறது. அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் ஐநா மன்றத்தில் கலந்து கொள்ளும் உரிமை உள்ளது. இதனை அமெரிக்க அரசாங்கம் நிபந்தனைக்கு உட்படுத்த முடியாது. பாலஸ்தீன இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளிடம் கேட்டதற்காக எனது விசா ரத்து செய்யப்பட்டது, அமெரிக்க அரசாங்கம் இனி சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியூயார்க்கில் தொடர்ந்து இருக்க முடியாது. ” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க பாலஸ்தீன அதிபர் மஹ்மூத்  அப்பாஸுக்கு  அமெரிக்கா விசா மறுத்ததை அடுத்து,  அவர்  ஐ.நா. பொதுச் சபையில் காணொளி வாயிலாக கலந்து கொண்டார் என்றது குறிப்படதக்கது.



source https://news7tamil.live/us-revokes-colombian-president-gustavo-pedros-visa.html

ஸ்பாட்டில் நடந்தது என்ன?

 27 09 2025

TVK rally tragedy

Vijay Karur rally tragedy

கரூர்: செப்டம்பர் 27, 2025

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பரப்புரைப் பயணத்தின்போது கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் இன்று (செப். 27) நடந்த பேரணியில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக மிகப்பெரிய துயரம் நிகழ்ந்துள்ளது. கடும் நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதில், 29 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: துயரத்தில் கரூர்

முன்னதாக, மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது கரூர் அரசு மருத்துவமனையின் இயற்கை மருத்துவர் அளித்துள்ள தகவலின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் சிறுவர், சிறுமிகள் உட்படப் பல தரப்பினர் அடங்குவர் என்பது வேதனை அளிக்கிறது. பிரேதக் கிடங்கிற்கு உடல்கள் கொண்டு செல்லப்படும் துயரமான காட்சிகள் வெளியாகி உள்ளன. பலியானவர்களின் உடல்கள் தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் போர்க்காலச் சிகிச்சை

நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்கள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்கள் எனப் 35க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவுகள் முழுவதும் நோயாளிகளால் நிரம்பி வழிவதால், நிலைமை மிகவும் இக்கட்டானதாக மாறியுள்ளது.

மூச்சுத் திணறலின் உச்சியில் இருக்கும் நபர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கு உடனடியாக செயற்கை சுவாசம் (Artificial Respiration) அளிக்கின்றனர். மூத்த மருத்துவர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர். 

சிறுவர்களைத் தொலைத்த பெற்றோரின் சோகம்

விஜய்யின் அறிவுறுத்தலையும் மீறி பரப்புரைக்கு அதிக எண்ணிக்கையில் சிறுவர்கள் அழைத்து வரப்பட்டனர். நெரிசலின்போது, ஒருவரையொருவர் தள்ளிவிட்டு விழுந்ததில், கையில் இருந்து குழந்தைகள் தவறி விழுந்த நிலைமை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

உயிரிழந்தவர்களில் நான்குக்கும் மேற்பட்ட சிறுவர்களின் உடல்கள் பிரேதக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மருத்துவமனையில் தங்கள் குழந்தைகளையும் உறவினர்களையும் தேடி வரும் பெற்றோர்களின் கண்ணீர் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன.

அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு

இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் நேரடியாக, மருத்துவர்களிடம் சிகிச்சையின் விவரங்கள் குறித்தும், கூடுதல் மருத்துவ உதவிகள் தேவையென்றால் அது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

இந்தத் துயர நிகழ்வு, அரசியல் பரப்புரைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்தும், மக்கள் கூட்டத்தைக் கையாள வேண்டிய அவசர நிலை குறித்தும் தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/vijay-karur-death-tvk-rally-tragedy-tvk-vijay-karur-campaing-tragedy-10508676

16 பெண்கள் உட்பட 39 பேர் பலி எனத் தகவல்: தமிழகத்தை உலுக்கிய விஜய் பிரச்சார சோகம்

 

karur death

16 பெண்கள் உட்பட 36 பேர் பலி எனத் தகவல்: தமிழகத்தை உலுக்கிய விஜய் பிரச்சார சோகம்

நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் அரசு மருத்துவமனைக்கு மட்டும் 22 உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கரூரில் உள்ள வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் நேற்று (நாள் தேவை) இரவு சுமார் 7.20 மணியளவில் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் விஜய் பேசினார். அவர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் பிரசாரப் பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கிச் சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் மயக்கம் அடைந்தனர். மயக்கம் அடைந்தவர்களை நிர்வாகிகள் தூக்கிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சுகள் மூலமாக அவர்களை மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றதில் நெரிசல் காரணமாகச் சிரமம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலால் அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது வரை 9 ஆண்கள், 16 பெண்கள் உட்பட 39 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகக் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குச் சிகிச்சை பெறுபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கரூர் போலீஸ் சூப்பிரெண்டு சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிச் சிறுவர்கள் சிலரும் காணாமல் போயுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/stampede-at-vijays-karur-rally-claims-over-30-lives-including-children-and-women-10508615

கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன" - ஸ்டாலின்

 


Stalin

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (2025 செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற மக்கள் சந்திப்புப் பயணத்தின் மூன்றாம் கட்ட பரப்புரையை மேற்கொண்டார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்த பின், அவர் பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாகக் கரூரை நோக்கிச் சென்ற போது, வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கரூர் பொதுக்கூட்டத்தில் அதிக அளவிலான மக்கள் திரண்டதால் கடும் நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதன் விளைவாகப் பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிவிட்டுச் சென்ற பிறகு, கூட்டம் கலையும்போதுதான் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாகவும்,  குழந்தைகள் உட்பட பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தகவலை அறிந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சைப் பெறுபவர்களிடம் பேசி வருகிறார். சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி, மருத்துவமனையைத் தயார் நிலையில் வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கரூருக்கு விரைந்துள்ளனர். சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் மருத்துவக் குழுவினர் கரூருக்கு விரைந்துள்ளனர். நெரிசலில் சிக்கியவர்களை ஏற்றிச்செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்துகொண்டிருப்பதால், கரூர் அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சிகிச்சைப் பெறுபவர்களில் ஒவ்வொருவராக உயிரிழந்து வருவதாக வரும் தகவல்கள், கரூர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திட, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியம், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரைத் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.


அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளேன். நிலைமையைக் விரைவில் சீராக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏடிஜிபியிடம் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்கள் மற்றும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கரூர் ஆட்சியர் மற்றும் ஏ.டி.ஜி.பியிடம் தொலைபேசியில் நிலைமையை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  

source https://tamil.indianexpress.com/tamilnadu/tragedy-strikes-actor-vijays-rally-in-karur-dozens-dead-and-injured-in-crowd-crush-cm-stalin-concer-10508666