புதன், 24 செப்டம்பர், 2025

”தேர்தல்களில் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு தொடரும்” – ராகுல்காந்தி பதிவு..

 

”தேர்தல்களில் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு தொடரும்” – ராகுல்காந்தி பதிவு..

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கத்திற்கும்  ​​அதன் முதல் கடமையாக இருப்பது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதாகும். ஆனால் பாஜக நேர்மையாக தேர்தல்களில் வெற்றி பெறுவதில்லை.வாக்குகளைத் திருடி, நிறுவனங்களை சிறைபிடித்து ஆட்சியில் நீடிக்கிறது. அதனால்தான்  45 ஆண்டுகளில் மிக உயர்ந்த வேலையின்மை நிலையை நாடு எட்டியுள்ளது.  வேலைகள் குறைந்து வருகின்றன, ஆட்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்துள்ளன, இளைஞர்களின் எதிர்காலம் இருளில் தள்ளப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு தேர்வு வினாத்தாள் கசிவும், ஒவ்வொரு ஆட்சேர்ப்பும் ஊழல் கதைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள், கனவு காண்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி தனது மக்கள் தொடர்பிலும், பிரபலங்களைப் புகபாட வைப்பதிலும், கோடீஸ்வரர்களின் லாபத்திலும்  மட்டுமே மும்முரமாக இருக்கிறார். இளைஞர்களின் நம்பிக்கைகளை உடைத்து அவர்களை அவநம்பிக்கைக்கு ஆளாக்குவது இந்த அரசாங்கத்தின் அடையாளமாகிவிட்டது. இப்போது நிலைமை மாறி வருகிறது. உண்மையான போராட்டம் வேலைகளுக்கானது மட்டுமல்ல, வாக்கு திருட்டுக்கும் எதிரானது என்பதை இந்திய இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.

ஏனென்றால் தேர்தல்கள் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை மற்றும் ஊழலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இப்போது இளைஞர்கள் தங்கள் வேலைகள் சூறையாடப்படுவதையோ அல்லது வாக்குகள் திருடப்படுவதையோ பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வேலையின்மை மற்றும் வாக்கு திருட்டில் இருந்து இந்தியாவை விடுவிப்பதுதான் இப்போது மிகப்பெரிய தேசபக்தி”

என்று தெரிவித்துள்ளார்.

23 09  2025


source https://news7tamil.live/unemployment-and-corruption-will-increase-as-long-as-votes-are-stolen-in-elections-rahul-gandhis-post.html