/indian-express-tamil/media/media_files/2025/09/23/tn-cm-mk-stalin-assures-coimbatore-journalists-get-house-patta-soon-tamil-news-2025-09-23-18-44-21.jpg)
கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.
கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.
கோயம்புத்தூர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசாங்கம் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை விலை வீட்டுமனை பெற கோயமுத்தூர் பத்திரிகையாளர்கள் 8 ஆண்டுகளாக முயன்று வருவதையும், அது தொடர்பாக நடந்த நகர்வுகள் குறித்தும் விவரித்தனர்.
கோவையில் முன்னதாக முதல்வரை சந்தித்தது குறித்தி நினைவுகூறப்பட்டு, அதன் தொடர்ச்சியாக நடந்த மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் தெரிவித்த விடயங்களை கனிவுடன் கேட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், உரிய நவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்ட தருவாயில் பெற முயன்றது குறித்து தெரிவித்த கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர் ஒருங்கிணைப்பு குழுவினர் , வழங்கப்பட இருக்கும் வீட்டுமனை குடியிருப்புக்கு அவரின் நினைவாக, கலைஞர் கருணாநிதி பத்திரிகையாளர் குடியிருப்பு என பெயர் சூட்டவும் வலியுறுத்தினர்.
திராவிட மாடல் ஆட்சி நடத்தி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்கள், மக்கள் பணி தொடர தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-mk-stalin-assures-coimbatore-journalists-get-house-patta-soon-tamil-news-10494667