/indian-express-tamil/media/media_files/2025/09/27/karur-death-2025-09-27-20-51-13.jpg)
16 பெண்கள் உட்பட 36 பேர் பலி எனத் தகவல்: தமிழகத்தை உலுக்கிய விஜய் பிரச்சார சோகம்
நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் அரசு மருத்துவமனைக்கு மட்டும் 22 உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் நேற்று (நாள் தேவை) இரவு சுமார் 7.20 மணியளவில் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் விஜய் பேசினார். அவர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் பிரசாரப் பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கிச் சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் மயக்கம் அடைந்தனர். மயக்கம் அடைந்தவர்களை நிர்வாகிகள் தூக்கிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சுகள் மூலமாக அவர்களை மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றதில் நெரிசல் காரணமாகச் சிரமம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலால் அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது வரை 9 ஆண்கள், 16 பெண்கள் உட்பட 39 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகக் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குச் சிகிச்சை பெறுபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கரூர் போலீஸ் சூப்பிரெண்டு சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிச் சிறுவர்கள் சிலரும் காணாமல் போயுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/stampede-at-vijays-karur-rally-claims-over-30-lives-including-children-and-women-10508615