வியாழன், 25 செப்டம்பர், 2025

ஜனவரி மாதத்திற்குள் பார்கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 வழக்கறிஞர்கள் சட்டம், 1961 இன் கீழ் நாடுமுழுவது பார் கவுன்சில் இது நிறுவப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் பதிவை ஒழுங்குபடுத்துதல், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வரையறுத்தல், சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்துதல் ஆகியவை பார் கவுன்சிலின் முக்கியப் பணிகள் ஆகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பார் கவுன்சில் உள்ளது. இந்த அனைத்து பார்கவின்சில்களும் இந்திய பார் கவுன்சிலுக்குக் கீழ் செயல்படுகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் முழுக்க உள்ள வழக்கறிஞர் சங்கங்களுக்கான தேர்தல்கள் பல மாநிலங்களில் நடத்தப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து  இது தொடர்பான வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது

அப்போது நீதிபதிகள் வரும் 2026 ஜனவரி 31ம் தேதிக்குள் அனைத்து மாநில பார் கவுன்சில்களின் தேர்தல்களும் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உத்த்ராவு பிறபித்துள்ளது. மேலும், வழக்கறிஞர் பதிவு செய்யப்படவில்லை வாக்களிப்பு ஒரு பட்டியல் தயாரிக்கப்படவில்லை போன்ற எந்த காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.



source https://news7tamil.live/bar-council-elections-should-be-held-across-the-country-by-january-supreme-court-orders.html