இதே கேள்வியை ஈழப் போர் நடந்தபோது... அங்கே இன்னொரு நாட்டு மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது... இதோ இந்த செய்தி படத்தில் உள்ள இதே மக்கள்தானே அன்றைக்கும் முன்னின்று போராடினார்கள் ..?!
அன்று...
இதே கேள்வியை கேட்டு இருக்கனும் நீ..! உன்னை அன்றே செமையா வச்சி செஞ்சிருப்பாங்க. போகட்டும்.
உனக்கு....
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"
இதற்கு எல்லாம் பொருள் தெரியுமா..?!
ஐநா சபையில் ஏன் இந்த இனப்படுகொலையை எதிர்த்து 150 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பேசிக்கொண்டு உள்ளார்கள்..?! அவர்களுக்கு உள்ள அதே தொடர்புதான் நமக்கும்.
அவர்களும் மனிதர்கள். நாமும் மனிதர்கள்.
சக மனிதர்கள் படுகொலை செய்யப்படும் போது நாம் அதை தட்டிக் கேட்காவிட்டால் நாம் மனிதர்களா..?!
சுமார் 200 ஆண்டு கால பிரித்தானியாக ஆக்கிரமிப்பின் வலியை உணர்ந்த நாம் தான், 80 ஆண்டுகால இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நா- சபையில் பாலஸ்தீனத்தோடு துணை நிற்கிறோம். பல பாலஸ்தீன ஆதரவு தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.
நாம ஏன் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு நமது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறோம்..? பல நாடுகள் நமக்கு ஏன் அவர்களின் பொருட்களை அனுப்ப அதை நாம் இறக்குமதி செய்கிறோம்..?!
பிற நாடும் வேண்டாம்... பிற நாட்டு மக்களும் வேண்டாம்... என்றால், உள்நாட்டிலேயே எல்லா உற்பத்திகளையும் பரிமாற்றங்களையும் வைத்துக்கொள்ளலாமே. முழுமையாக அது முடியுமா..? சாத்தியமா..?! அதனால் யாருக்கு நஷ்டம்..?!
இன்று... இந்தியர் வேலை பார்க்காத உலக நாடுகள் உண்டா..? ஏன் அவர்களுக்கும் நம் நாட்டிலேயே வேலை கொடுக்க முடியவில்லை..?
நாம ஏன் உலகின் எல்லா நாடுகளிலும் தூதரகங்களை அமைத்து வைத்துள்ளோம்...? அதேபோல நாம் ஏன் பிற நாட்டின் தூதரங்களை டில்லியில் அமைக்க அனுமதி அளித்துள்ளோம்..? நமக்கும் அந்த நாடுகளுக்கும் என்ன சம்பந்தம்..?! இப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளாயா..?!
உன் ஊரில்.. உன் வீட்டுக்கு அருகில்... பக்கத்து தெரு குடிசைகள் எரியும் போது... உடனே மனம் பதைத்து ஓடிப்போய் தண்ணீர் ஊற்றி அனைத்து உள்ளாயா..?! தீ அணைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளாயா..?!
ஈழத்தில் கொல்லப்பட்ட மக்கள் நீ பேசும் அதே மொழி பேசும் மக்கள் என்றால்... உன் பக்கத்து தெரு மக்களும் உன் மொழி பேசும் அதே மக்கள் அல்லவா..?! அப்போது மட்டும்... தனக்கும் பக்கத்து தெரு குடிசை மனிதர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி... அவர்களிடம் சாதி வேற்றுமை பார்த்து... சாதி வெறி கருத்துகளை பேசுகிற ஆளுக்கு எப்படி அடுத்தவர்களின் வலி தெரியும்..?!
உலக மக்கள் அனைவரும் ஒரேயொரு ஆப்ரிக்க தாயிடம் இருந்து பிறந்த மக்களாக... அறிவியல் கூறும் Mitochondrial Eve என்கிற ஜீனோம் அறிவியல் கருத்துகளை உள்வாங்கி... உலக நாடுகளில் வாழும் எல்லா மக்களையும் உன் சகோதரனாக நினை..!
அதற்கு... முதலில் வர்ணாசிரம சாதி மூட நம்பிக்கை மனநிலையில் இருந்து வெளியே வா. அதன் பின்னர், மக்கள் எங்கு பாதிக்க பட்டாலும் உள்ளத்தின் ஆழத்தில் தன் சகோதரன் என்கிற இரக்கம் தன்னாலே வந்து விடும்.
சமீபத்தில்...
தன் மீது விழுந்த இஸ்ரேலிய ஏவுகணைகளுக்கு பதிலடியாக... இஸ்ரேல் நோக்கி ஈரான் அனுப்பிய ஏவுகணைகள் இஸ்ரேலில் விழுந்து... அங்கே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து... அதில் தன் குழந்தையை பறிகொடுத்த ஒரு யூத பெண்... ஏதோ ஒரு புரியாத மொழியில்... தலையில் அடித்துக்கொண்டு... இடிந்து போன வீட்டுக்குள் கதறி அழும்போது... என்னுடைய ஒரு சகோதரியின் இழப்பின் வலி அப்போது என்னுள்ளே இருந்தது. கண் கலங்கியது. மக்களை கொல்லும் ஜியோனிச வெறியர்கள் வேறு. அவர்களை கடுமையாக எதிர்க்கிற யூத மக்களும் இஸ்ரேல் உட்பட பல நாடுகளில் வாழ்கிறார்கள் என்கிற உண்மை தெரிந்த பலருக்கும் நிச்சயமாக அந்த வீடியோ காஸா மக்கள் வலியில் கதறிய போது கொடுத்த வலியை தந்து இருந்திருக்கும். இதுதான் மனிதம்.
இது....
சாதி வெறி கொண்ட சங்கி அடிமை மனநிலையை விட்டு வெளியே வந்தால்தான்... அந்த மனதுக்குள் மனிதம் புகும்
source FB page