மத்திய ரிசர்வ் வங்கியானது ஒரு தலைமை ஆளுநரையும் 4 துணை ஆளுநர்களையும் கொண்டுள்ளது. இதில் ஒரு துணை ஆளுநரான ராஜெஷ்வர் ராவ் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
இதனை தொடர்ந்து புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் அக்டோபர் 9ல் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கும் ஷிரிஷ் முர்மு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருப்பார்.
29 9 2025
ஒடிசாவைச் சேர்ந்த ஷிரிஷ் முர்மு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது மும்பையில் வசிக்கும் முர்மு, ரிசர்வ் வங்கியில் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
source https://news7tamil.live/shirish-chandra-murmu-appointed-as-new-deputy-governor-of-reserve-bank-of-india.html