/indian-express-tamil/media/media_files/2025/09/29/kanimozihi-gives-comp-in-karur-1-2025-09-29-00-16-59.jpg)
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, ரூ.10 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை வழங்கினார்.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த, தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த படி, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் வழங்கினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-kanimozhi-condolences-and-gives-cheque-of-rs-10-lakh-to-family-of-who-dies-in-vijays-stampede-in-karur-10511207