ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

சூடான் : MASJID மீது துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு!

 

சூடான் : MASJID  மீது துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு!



20 09 2025

சூடானில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்துக்கும், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரப்போட்டி தொடங்கியது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவமானது வடக்கு டார்பூரின் தலைநகரான எல்பாஷர் நகரில் உள்ள MASJID  மீது நேற்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே அதிகாலை டிரோன் மூலமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வயதானவர்கள், குழந்தைகள் உட்பட மசூதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.


source https://news7tamil.live/sudan-43-killed-in-paramilitary-drone-attack-on-mosque.html