வியாழன், 30 ஜூலை, 2015

வள்ளல்!



வள்ளல்!
கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன்
நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு,
இந்தியாவுக்கு மிகவும்
அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.
சீனாவிடமிருந்து எழுந்த பெரும்
அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமான
நிதி இந்திய ராணுவத்திடம்
இல்லாததால் அதனை திரட்ட
ஆரம்பித்தார், லால் பகதூர் சாஸ்திரி.
அன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்.
இதற்காகவென்று தேசிய
பாதுகாப்பு வைப்பு நிதி (National
Defense Fund) ஒன்றை ஏற்படுத்திய
இந்திய அரசு, அதன் மூலம் செல்வ
செழிப்புள்ள இந்திய குறுநில
மன்னர்களுக்கு வேண்டுகோள்
விடுத்தது.
ஆனால், தேவையைப்
பூர்த்தி செய்யும் படியான உதவிகள்
எங்கிருந்தும் வரவில்லை.
ஆபத்தான நிலைமையைப்
புரிந்து பதைபதைத்த பிரதமர் லால்
பகதூர் சாஸ்திரி உடனடியாக
ஹைதராபாத்திற்கு விரைந்தார்.
இந்தியாவின்
வேண்டுகோளை மறுக்காமல்
நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல
மனிதர் அங்கிருக்கிறார் என்பதில்
திடமான நம்பிக்கை கொண்டிருந்தார்
லால் பகதூர் சாஸ்திரி.
அவர் சென்று சந்தித்தவர் ஹைதராபாத்
நிஜாம் மிர் உஸ்மான் அலீ கான்
(Huzoor Nizam Mir Osman Ali
Khan). நேரில் ஹைதராபாத்
நிஜாமை சந்தித்த பிரதமர்,
நிலைமையை விளக்கினார்.
கூர்ந்து கேட்டுக் கொண்ட
ஹைதராபாத்
நிஜாம் மறுபேச்சு ஏதும் பேசாமல்
எழுந்தார். தனது கருவூலத்திலிருந
்து ஐந்து டன்கள் எடையுள்ள
தங்கத்தை உடனடியாக இந்தியாவின்
தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க
உத்தரவிட்டார். (வழங்கிய
நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600
கோடிகளுக்கும் மேல்)
ஹைதராபாத் நிஜாமின் இந்த
உத்தரவு இந்தியாவையே உலுக்கியது.
இந்திய பாதுகாப்பு நிதிக்காக
உதவி கேட்டால் தனது சொத்தின்
ஒரு பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த
மனிதர் என்ற பேச்சு எங்கும் பரவியது.
இன்றைய தேதிவரை இந்தியாவில் எந்த
ஒரு பிரமுகரோ ஒரு நிறுவனமோ
கொடுத்திராத
தொகையை தனது சொந்த
நிதியில்
இருந்து வழங்கி, மிகப் பெரிய
கொடை வள்ளலாய்த் திகழ்ந்த
ஹைதராபாதின் கடைசி நிஜாம், கடந்த
பெப்ரவரி 24, 1967
அன்று மறைந்தார்.
அன்று இந்தியாவை பலப்படுத்திய
இந்த நிதி பலர் அறிந்திராத நிகழ்வு.
முந்தைய ஆட்சிகள் மாறி காட்சிகள்
மாறி புதிய ஆட்சிப்
பொறுப்பு ஏற்றவுடன் இந்திய
வரலாற்று ஆவணங்களை எரித்து விடலாம்.
அழித்து விடலாம். ஆனால், நடந்த
காலத்திற்குச் சென்று திருத்தி விட முடியாது.

”யாக்கூப் மேனின் தூக்கு இந்திய அரசின் பயங்கரவாதம்”



இன்று மதியம் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலர் தோழர் மில்டன் கண்டன உரையாற்றுகிறார்!

முக பெரிய - அதப்,


நாட்டின் முன்னாள் : 11வது ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி  அப்துல்கலாம், 27/07/2015 அன்று மலை மாரடைப்பால் மௌதானர்.
(மரணத்தில் சந்தேகம் உள்ளது,
1)  7 மணி அளவில் மாரடைப்பு வந்தது ,
2)  7: 30 மணியளவில் தான்  மருத்துவமனை  அனுமதி, இந்த  தாமதம் ஏன்???
3) நிகழ்விடத்தில் மருத்துவ உதவிக்கு எந்தவிதமான முநேற்படும்  செய்ய தவறியது ஏன் ???
4) மரணத்தின் விபரம் அரசு  (மதிய மற்றும் மாநில அரசு ஒரு வெள்ளை அறிக்கை தரவேண்டும்)




 மரணித்து அடக்கம் செய்ய மூன்று நாட்கள் தாமதித்து ஏன்???

மரணித்தவரை விரைவில்  அடக்கம் செய்ய கூறுகிறது இஸ்லாம்... முஸ்லிம்களின் நம்பிக்கைக்கும் எதிராகவும், அரசு மூன்று நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்ய, யாரை கேட்டது , இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் ஏன் வாய்திரகவில்லை .

மரியாதையை : என்ற பெயரில் அப்துல் கலாம் அவர்களின் சவத்தை மூன்று நாட்கள் வைத்து அலைகளித்த , அரசு மரியாதையை என்று  முப்படை, சுட்டெரிக்கும் வெயிலில் வைத்தது தவிர்த்திருக்கலாம்.

புகை படம் வைப்பது,
விளக்கு ஏத்துவது
மலர் தூவுவது
மலர்வளையம்/ மாழை அணிவிப்பது
நினைவிடம் அமைப்பது
மணிமண்டபம் அமைப்பது
அரசு அலுவலம்களில் புகைப்படம் வைப்பது...

மரியதை என்று செய்யப்பட்டு -இவை அனைத்தும் இஸ்லாம்  நம்பிக்கைக்கு எதிரான  செயல் பாடுகள் ,
முஸ்லிம்கள் உணர்வுகளை மதிக்கும் வகையல் அனைவரும் செய்யல படவேண்டும்.

முஸ்லிம் எந்த ஓர் மனிதர் (சமுகத்தில் உயர்த்த நிலையில்) உள்ளவர் மரணித்தல். அவர் மதத்தில் அடிபடைலும் , அவர் உணர்சிக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்க கூடாது ...

பொதுநல வழக்கு தொடர யாரும் முன்வருவார்களா ?????

முற்றிலும் முஸ்லிகள் உணர்வு மற்றும் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் மரியாதையை செய்வதாக எண்ணி - இரந்த  உடலை பெரும் கஷ்டத்தில் உள்ளாகி, படைத்தவனுடைய சாபதிர்க்,  ஆலகிவிடிர்கள்.

இறந்தவரை விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அடிப்படை இஸ்லாம் கூட விளங்காத முஸ்லிம் அமைப்புகள். மௌவ்னம் காத்து எதற்கு ...

ஒருவர் இஸ்லாத்தை (ஒரிரைகொல்கை ) ஏற்ற்றுவிடல் அவர் முஸ்லிமகிவிட்டார்.
அவர் இஸ்லாம் கூறும் முறைகள் படி வாழ்வை அமைத்தார??? இல்லையா ??? .....

என்பது ஒரு புறம் இருந்தாலும் .....

கலிமா மொளிதவராக - மரணித்திருக்கிறார்....



உண்மையான மரியாதையை :
1) அவருடைய மன்னரை வாழ்வுக்கும், மறுமைக்கும் துவ செய்ய வேண்டி...
2) அவர் வழியில் - லஞ்சம் இல்லாத , வல்லரசு நாடக மற்ற புதிய தலைமுறை உறுதி எடுக்கவேண்டும் ....

ஜனாசா தொழுகை





முக்கண்ணாமலைபட்டி ஜமாத்தார்களால்முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்அவரகளுக்கு ஜனாசா தொழுகை நடத்தப்பட்டது 
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
















புதன், 29 ஜூலை, 2015

இந்தியாவில் இப்படியொரு காட்சி இதுவே கடைசியாக இருக்கலாம்.

Eliyas Tirupur's photo.



இதுதாங்க உலகமே போற்றுகின்ற அணு நாயகனின்
குடும்பமும், சொத்தும்...!!! நம்மூரில் கவுன்சிலர் 
குடும்பம்கூட ஸ்கார்பியோ கார்ல போகும் போது ஒரு
முன்னாள் ஜனாதிபதியின் அண்ணன் பனியன்கூட
போடாத இயல்பான காட்சியை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் ஒருவேளை இந்தியாவில்
இப்படியொரு காட்சி இதுவே கடைசியாக இருக்கலாம்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

சுற்றறிக்கையை படியுங்கள்

இந்து இயக்கங்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட,பிற்ப்படுத்தப்பட்ட தோழர்களே !!!
ஆர்.எஸ்.எஸ் யின் இந்த சுற்றறிக்கையை படியுங்கள்,,,1995 இல் ரகசியமாக ஆர்.எஸ்.எஸ் பார்பன கும்பலுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை...
இதை அப்போது சில ஆங்கில நாளிதழ்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன..விடுதலை நாளிதழிலும் வெளியானது,,
சிறிதேனும் மானமும்,அறிவும் இருந்தால் யோசியுங்கள்,,,

thanks to Manoj Kumar - FB

சிறுகுடல் கட்டிகள்

டாக்டர் ஜி. ஜான்சன்
SIஇரைப்பையிலிருந்து பெருங்குடல்வரையுள்ள பகுதி சிறுகுடல். இதன் நீளம் 6 மீட்டர் அல்லது 20 அடி. உணவை ஜீரணம் செய்யும் முக்கிய பணியை சிறுகுடல் செய்கிறது. இங்குதான் உணவின் சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தக் குழாய்களில் புகுந்து இருதயத்தை அடைந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.
சிறுகுடலில் கட்டிகள் வருவது மிகவும் குறைவு. புற்றுநோய் வகைகளில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில்தான் சிறுகுடலில் உண்டாகிறது.பெரும்பாலானவை பெருங்குடலில்தான் ஏற்படுகிறது. ஆனால் உங்களுடைய தோழியைப்போல் ஒருசிலருக்கு சிறுகுடலிலும் கட்டிகள் வளரலாம் இதில் வயிற்று வலிதான் முக்கிய அறிகுறியாகும். அது தவிர வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்.
அறிகுறிகள்
* வயிற்று வலி – வலி வயிற்றின் நடுப்பகுதி அல்லது அனைத்துப் பகுதிலும் தோன்றும். வலி வருவதும் போவதுமாக இருக்கலாம்.
* வயிறு வீக்கம் ​ – வயிற்றினுள் காற்று அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு.
* வாந்தி
* பசியின்மை
* இரத்தக் கசிவு – சிறுகுடலில் இரத்தக்கசிவு உண்டாகும். அது கரு நிறத்தில் மலத்துடன் கலந்து வெளியேறும்.
* இரத்தச் சோகை
* எடை குறைவு ​- புற்று நோய் எங்கிருந்தாலும் எடை குறைவு என்பது முக்கிய அறிகுறியாகும்.
* பலவீனம்
* காய்ச்சல்
* சிறுகுடல் அடைப்பு – இது உண்டானால் வலி கடுமையாக இருக்கும்.
* லிம்போமா கட்டிகள் – சிறுகுடலில் இத்தகைய கட்டிகள் வளரலாம்.
நோய் இயல்
SI2பெருங்குடலைப்போன்று சிறுகுடலில் அதிகமாக கட்டிகள் தோன்றுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சிறுகுடலினுள் ஜீரனமான திரவம் வேகமாக தள்ளப்படுகிறது. சிறுகுடலினுள் எதிர்ப்புசக்தியை உண்டுபண்ணும் ” லிம்ப் ” அதிகம் உள்ளதால் அங்கு கிருமிகளின் வளர்ச்சியும் குறைவுதான்.
சிறுகுடலில் தோன்றும் கட்டிகள் இரண்டு வகைப்படும். அவை வருமாறு :
புற்று நோய் இல்லாத கட்டிகள் – இதில் அடினோமா, லேயோமா, லைப்போமா போன்ற கட்டிகள் அடங்கும்.
புற்று நோய்க் கட்டிகள் – இதில் அடினோகார்சினோமா ( 50 சதவிகிதம் ), லிம்போமா ( ( 25 சதவிகிதம் )ஆகியவை அடங்கும். இத்தகைய புற்றுநோய்க் கட்டிகள் சிறுகுடலில் பெரிதானால் அவை அடைப்பை உண்டுபண்ணுவதோடு இரத்தக் கசிவையும் உண்டுபண்ணும்.இதை உடனடியாகக் கவனிக்கவில்லையெனில் சுற்றுப் பகுதி உறுப்புகளுக்கு பரவும். அல்லது இரத்தத்தில் கலந்து உடலின் வேறு உறுப்புகளிலும் பரவும்.
பரிசோதனைகள்
SI3* எண்டோஸ்கோப்பி பரிசோதனை – இதில் நுண்ணிய படம் எடுக்கும் கருவி பொருத்தப்பட்ட குழாய் வாய் வழியாக வயிறு, குடலின் மேல்பகுதிக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அதன் மூலம் அங்கு கட்டிகள் உள்ளதைக் கண்டறியலாம்.அப்படி இருந்தால் அதன் ஒரு சிறு பகுதி அகற்றப்பட்டு ” பையாப்சி ” பரிசோதனை செய்யப்படும்.
* பேரியம் எக்ஸ்ரே பரிசோதனை – இதில் பேரியம் திரவம் குடிக்கத் தந்து வயிற்றுப் பகுதியில் அது செல்வதை எச்ஸ்ரே மூலம் பார்த்து படம் எடுக்கப்படும். அதில் கட்டிகள் இருப்பது தெரியவரும்.
* சி.டி. ஸ்கேன் பரிசொதனை​ – இதில் கட்டிகளின் அளவு கண்டறியலாம்.
* லேப்பரோடோமி – இதில் வயிற்றில் அறுவை செயப்பாட்டு கட்டிகளை நேரில் பார்க்கப்படும். அதன்பின்பு அவற்றை அகற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
சிகிச்சை முறைகள்
கட்டிகள் உள்ளது நிரூபிக்கப்பட்டபின்பு அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவதே சிகிச்சையின் முக்கிய நோக்கம். ஒருவேளை சிறுகுடலின் ஒரு பகுதியும் கட்டியுடன் அகற்றப்படலாம். புற்று நோய்க் கட்டிகளாக இருந்து அகற்றப்பட்டபின்பு ” கீமோதெராப்பி ” என்ற சிகிச்சையில் மருந்துகள் தரப்படும்.
முதலில் உங்களுடைய தோழிக்கு எந்தவிதமான கட்டி உள்ளது என்பதை மேற்கூறியுள்ள பரிசோதனைகளின் வழியாக நிர்ணயம் செய்தாகவேண்டும். அதன்பின்புதான் அது ஆபத்தானதா இல்லையா என்று தெரியவரும். அது எத்தகையதாக இருந்தாலும் நிச்சயம் அதை அகற்ற அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.

இயற்கையாக மரணித்தாரா ? அல்லது அவர்களை கொன்றார்களா ?



முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மரணம் எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தி ..

நமக்கு எழும் சந்தேகங்கள் ..
அப்துல் கலாம் இறப்பு நிச்சயம் முஸ்லீம்களுக்கு மிக பெரிய இழப்பு தான் இந்தியா விடுதலைக்கு பின் இஸ்லாமியர்களை கொச்சை படுத்தி திவீரவாதிகளாக , பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்த நிலையில் முஸ்லீம்களால் இந்தியாவுக்கு நன்மையே என மீண்டும் நினைவு படுத்தியவர் டாக்டர் அப்துல் கலாம் .. அவருடைய இழப்பு இந்தியாவுக்கு மட்டும் இல்லை இஸ்லாமியர்களுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது ..
அதே நேரத்தில் டாக்டர் அப்துல் கலாம் மரணத்தில் ஒரு சந்தேகமும் உள்ளது காரணம் Neera Yadav, Education Minister of Jharkhand,ஜார்காண்ட் கல்வி அமைச்சர் நீரா யாதவ் இரண்டு மாதம் முன்பு டாக்டர் அப்துல் கலாம் புகைப்படத்திற்க்கு மாலை அணிவித்து பொட்டு வைத்துள்ளார் இந்துகள் ஒருவர் இறந்துவிட்டால் தான் இப்படி சடங்கு செய்வார்கள் . இந்த செய்தி சில ஊடகங்களிலும் வந்தது அந்த நேரத்தில் கலாம் இறந்து விடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை , சூழ்ச்சிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடதக்கது ..
27-07-2015 திங்கள் மேகலாயாவில் உள்ள (Indian Institute of Management ) விரிவுரை வழங்க சென்று இருந்த போது திடீர் என மாரடைப்பு வந்ததாக அங்குள்ள மருத்துவமனையில் ICU வாட்டில் சேர்த்து பரிசோதித்த டாக்டர்கள் அப்துல் கலாம் இறந்து விட்டார் என கூறியதாக செய்தி வந்துள்ளது .
நமக்கு எழும் சந்தேகங்கள் ..
1) இரண்டு மாதம் முன்பே அப்துல் கலாம் இறந்து விடுவார் என்ற செய்தி எப்படி ஜார்காண்ட் மாநில பி.ஜே.பி. கல்வி அமைச்சருக்கு வந்தது ?
2) அப்துல் கலாம் உடல்நிலை மோசமாக இருந்தது என பி.ஜே.பி நடுவன் அரசுக்கு தெரிந்து இருந்தும் எதற்க்காக மேகலாயாவிற்க்கு விரிவுரை ஆற்ற அப்துல் கலாம் அவர்கலை மத்திய அரசு அனுப்பியது ?
3) முன்னாள் ஜனாதிபதிக்கு 6-30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது 7-00 மணிக்கு மருத்துவ மணையில் ICU வார்டில் சேர்த்துள்ளார்கள் அப்படி என்றால் அருகில் மருத்துவமணைகள் இல்லாத இடத்தில் ஒரு முன்னால் ஜனாதிபதியை விரிவுரையாற்ற அனுமதித்தது ஏன் ?
ஆக இப்படி பல சந்தேகங்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மரணத்தில் புதைந்துள்ளது ..
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் இயற்கையாக மரணித்தாரா ?
அல்லது டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை கொன்றார்களா ? என
தமிழக அரசும் , ஊடகங்களும் , மனித உரிமை ஆர்வாளர்களும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மரணத்தில் ஏதாவது மர்மங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ..
ஆகையினால் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மரணத்தில் உண்மை நிலையை மத்திய பி.ஜே.பி அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகள் , தமிழக அரசியல் கட்சிகள் , சமூக ஆர்வாளர்கள் அனைவரும் நடுவன் அரசை கட்டாயப்படுத்த வேண்டும் என்பது இந்திய தேசிய லீக் கட்சியின் கோரிக்கை ..
இந்த கோரிக்கை அரசியல் ஆதாயத்திற்க்காக அல்ல இந்தியாவின் உண்மை மனிதரின் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மரணம் நம்மை இப்படி சிந்திக்க தூண்டுகின்றது ..

Hadis - இறந்தோரை ஏசாதீர்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்."
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Bukhari 1393

திங்கள், 27 ஜூலை, 2015

APJ Abdul Kalam - Passed away

இன்னா இலாஹி வ இன்இலைகி ராஜுவூன்

Hadis - சொர்க்கவாசிகளின் குணமாகும்

நோய்வாய்ப்பட்டவர்களை ‪#‎நலம்‬ விசாரிப்பது சொர்க்கவாசிகளின் குணமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), முஸ்லிம் 5017

நாட்டுக்கு பெயர் மட்டும் ஜனநாயாக நாடு


அரியலூர், ஸ்ரீரங்கம் கோவில், ரயில் நிலையம , உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என கடந்த 2 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் எழுதிய திருச்சியை சேர்ந்த ஜோசப் ஸ்டீபன் மற்றும் லால்குடியை சேர்ந்த முருகானந்தம் ~ இருவர் கைது .
ஸ்ரீரங்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை.
இவர்கள் முஸ்லிம் இல்லை என்பதால் தீவிரவாதிகள் ஆக இருக்கமாட்டார்கள் முதுகு எழும்பு இல்லா கார்ப்பரேட் பணிய கும்பல்களான ஊடகம் இந்த உண்மைகளை சொல்லபோவதும் இல்லை ஆதிகார வர்ககமும் அந்த பார்வையில் விசாரிக்க போவது இல்லை
நாட்டுக்கு பெயர் மட்டும் ஜனநாயாக நாடு

அசாத்தியமான திட்டங்கள் சாத்தியப்படும்

Aam Aadmi Party Tamil Nadu's photo.

அசாத்தியமான திட்டங்கள் சாத்தியப்படும் . ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில்  டெல்லியில் நிறுவப்பட்ட எளிய வார்டு கிளினிக் (Mohalla Clinic).
• ஐம்பது நோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யும் வசதி, அதன் முடிவுகள் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரத்துக்குள் கிடைக்கும்.
• குளிரூட்டப்பட்ட கிளினிக் இனி ஏழை எளிய மக்களுக்கும் சாத்தியமானது.
• உயரிய திறன் கருவி மூலம் 33 வகையான சோதனைகள் (BP முதல் HIV சோதனை வரை)
• மருத்துவ மையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் மற்றும் ஒரு மருத்துவ தொழில்நுட்பனர்.
• ஒரு மகப்பேறு மருத்துவர் மற்றும் ஒரு குழந்தை மருத்துவரும் வாரம் ஒரு முறை மையம் வருகை.
• அவசர சிகிச்சை தேவைப்படின் ஆம்புலன்ஸ் ஏற்பாடு.
• இது போன்ற சிறிய வகை கிளினிக் ஆங்காங்கே டெல்லி முழுவதும் நிறுவப்படுவதால் பெரிய ம௫த்துவமனைகளில் கூட்ட நெரிசல் குறைவு.
• சுகாதார தூய்மையுடன் ஒரு தரமான ம௫த்துவ மையம்.

நாடு நீதிக்கான மக்கள் புரட்சியை நோக்கி நகரும்

 நாடு நீதிக்கான மக்கள் புரட்சியை நோக்கி நகரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நீண்ட சிறைவாசம், பொய் வழக்குகள், காவல் கொலைகள், போலி என்கௌண்டர், இஸ்லாமிய இயக்கங்களுக்குத் தீவிரவாத முத்திரை குத்துதல் என ஒரு பக்க சார்பாய் முஸ்லிம்கள் தொடர்ந்து இந்திய நாட்டில் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.
இனப்படுகொலைகள், மக்கா மசூதி, அஜ்மீர், மலேகான், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் போன்ற குண்டு வெடிப்பு வழக்குளில் குற்றம் நிருபிக்கப்பட்ட சாத்வி பிரக்யா போன்றோருக்கு ஒரு நீதியும் குற்றம் நிரூபிக்கப்படாமல் நாட்டின் பொதுமனசாட்சி என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன்னொரு நீதியும் காட்டுவது ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது.
குழந்தை, பெண்கள் என நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்தது நிரூபிக்கப்பட்டு ஆயுள்தண்டனையே விதிக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி போன்றோர் சுகமாக, சுதந்திரமாக நாட்டில் உலா வர அனுமதிக்கப்பட்டிருக்கும் இதே காலகட்டத்தில், குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படாமலேயே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் யாகூப் மேமனின் தண்டனை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு நீதி இல்லை என்பதைத் தெள்ள தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

மிக மிக அரிய புகைபடம் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி 1951ம் ஆண்டு திறப்பு விழா புகைபடம் அன்றைய மகா ராணி அன்றைய கவர்னர் மற்றும் ஜமால் கல்லூரி நிறுவனர்கள் அதிகமாக ஷேர் செய்யும் உங்களுக்காக எடுக்கபட்ட அரிய புகைபடம்.....
Daily Trichy's photo.

படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம்

மனித நேயம்'s photo.

ாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார் மன்னர் செல்வதற்க்கு முன்பே தொழுகைக்கு எல்லோ௫ம் நின்றுவிட்டார்கள் மஜ்ஜித்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் தொழுது முடிந்தவுடன் பிச்சை எடுக்க வசதியாக எல்லோ௫ம் நின்ற பிறகு கடைசியாக பின் வரிசையில் நின்று கொண்டார்கள் அப்போது இந்திய பாதுகாப்பு படையினர் சௌதி மன்னரை முன் வரிசைக்கு அழைத்து செல்ல முயன்றார்கள் மன்னர் பாதுகாப்பு படைகளை கடிந்துவிட்டு இஸ்லாத்தில் இது போன்ற செயல்கள் கிடையாது படைத்தவனின் முன் அனைவ௫ம் சமம் என்று கூறிவிட்டு பின் வரிசையில் பிச்சைகாரர்களுடன் ஒன்றாக நின்று தோலோடு தோல் சேர்ந்து தொழுதுவிட்டு தி௫ம்பினார் சௌதி அரேபிய நாட்டு மன்னர்

யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை

யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை நான் மிக கவனமாக படித்தேன்... அவர் குற்றவாளி என்று தீர்பளிக்க உதவிய சாட்சிகளும் ஆதாரங்களும் மிக பலகீனமானவை
நீதி துறையை பொருத்தவரை.... குற்றம் சாட்டப்பட்டவன் நிரபராதியாக இருந்தாலும் தூக்கில் தொங்கினாலும் பரவாயில்லை.... தாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக மிகவும் கடுமையாக நடந்துகொள்பவர்கள் என்று தங்களை பொதுவில் காட்டிக்கொள்ள பல நீதிபதிகள் விரும்புவது தற்போது பிரபலமாகி வருவது மிகுந்த அச்சத்தை தருகிறது
- முன்நாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு

முடி உதிர்தல், இளநரை சரியாக....

ஆயுர்வேதம் &  சித்த மருத்துவம்.'s photo.

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.
கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.
மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.

மாடித் தோட்டம் அமைக்க வேண்டுமா?



உங்கள் வீட்டில் எளிய முறையில் குறைந்த செலவில்🌿 மாடித் தோட்டம் அமைக்க வேண்டுமா?
நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்
இந்தியாவில் முதன்முறையாக நாங்கள் தேங்காய் நாரினாலான மண் போன்ற பொருளில் வீட்டிலேயே குறைந்த செலவில் (ரூ.160/-) காய்கறிகள் 🍆,கீரைகள்🌿🌱, மற்றும் பூக்கள்🌺 வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்துகிறோம் .
அயல்நாடுகளில் இம்முறையை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். இம்முறையை குறைந்த எடையில் பாலிதீன் பை மற்றும் அட்டைப் பெட்டியில் பேக்கிங் செய்து மாடித் தோட்டம் (Terrace Gardening)என்ற பெயரில் உங்களுக்குத் தருகிறோம் .
மாடித் தோட்டம் வாங்குவதன் மூலம்
1.பூந்தொட்டி வாங்கத் தேவை இல்லை
2.மணல் வாங்கத் தேவை இல்லை
3.உரம் வாங்கத் தேவை இல்லை
4.விதை வாங்கத் தேவை இல்லை
5.தண்ணீர் மட்டும் ஊற்றினால் போதுமானது
👪குழந்தைகள் முதல் பெரியவர் வரை வளர்க்கும் எளிய முறை
மேலும் விவரங்களுக்கு
📞Phone: 9962884634,9962884635.ஐ அணுகவும்

தங்கம் விலை

தங்கம் விலை குறைவது மோடியால் அல்ல (சாப்பாட்டு) கல்யாண ராமா......
**********************************************************************************
தங்கம் விலை குறைவதற்கு உலகளாவிய பொருளாதார அடிப்படையின் படி இரண்டே காரணங்கள் தான் உள்ளன.
1. எந்த ஒரு பொருளும் திடீரென தேவைக்கு அதிகமாக வருமேயானால் அந்த பொருளின் விலை குறையும் என்பது "கிராமத்து மூலையில்" பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு கூட தெரியும்.
அந்த அடிப்படையில் உலக சந்தையில் தற்பொழுது தங்கத்தின் வரத்து அதிகமாகி வருவதனால் விலை குறைந்து கொண்டு வருகிறது.
ஏன் திடீரென தற்பொழுது - அதுவும் எங்கள் மோடி அண்ணன் பிரதமராக இருக்கும்பொழுது மட்டும் தங்கம் வரத்து அதிகரிக்க வேண்டும்.....? இது உனது அடுத்த கேள்வி.....இலையா......ராமா.....?
ராமா.... இந்தியாவில் வரத்து அதிகரிக்கவில்லை.....தற்பொழுது "கிரீஸ்" நாடு தமது நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற தங்களது அரசு கையிருப்பு தங்கத்தை விற்று "அமெரிக்க டாலர்" சேமிக்க துவங்கியுள்ளார்கள்....
இதனால் உலக சந்தையில் தங்கம் தேவையை விட மிகுதியாகிறது.
இதுவல்லாமல் சைனா, தென்கொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த வருடம் புதிய தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, படிப்படியாக அவற்றின் செயலபாடுகளும் வரத்துவங்கி விட்டது.
இப்படி தேவையை காட்டிலும் அதிகமாக வரத்து உள்ளதால் தங்கம் விலை குறைந்து கொண்டே செல்கிறது.
2. தங்கம் தேவையை மீறி வருவதனால் இது வரை தங்கத்தின் மதிப்பின் மீது நம்பிக்கை கொண்டிருந்த உலக முதலீட்டார்கள், அவர்களது கை இருப்பு தங்கத்தை விற்று "அமெரிக்க டாலரில்" முதலீடு செய்ய துவங்கி விட்டனர்.
இதனாலும் தானாகவே தங்கத்தின் மதிப்பு குறைவதோடு "அமெரிக்க டாலரும்" வலுப்பெற்று வருகிறது.
உண்மை நிலை இவ்வாறிருக்க "அண்டப்புளுகு - ஆகாசப்புளுகு அவிழ்த்துவிடும் கல்யாண ராமர் போன்ற அறிவாளிகள்?????? கொஞ்சம் யோசித்து கதைகள் கட்டுவது, கொஞ்சமேனும் அவர்களது மரியாதையை காப்பாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும்.
--T.H.M K

ஃபித்ரா கணக்கு



நமது ஊரின் TNTJ சார்பான 2015 - க்கான ஃபித்ரா கணக்கு........உங்கள் பார்வைக்காக

If u lose your mobile in India, you can get it back.



Got an interesting fact to share..
Nowadays each one of us carries very high end or latest Mobile devices which always Fears that it may be stolen.

Each mobile carries a unique IMEI no. i.e. International Mobile Equipment Identity No which can be used to track your mobile anywhere in the world.

This is how it works!!

1. Dial *#06# from your mobile.

2. Your mobile shows a unique 15 digit.

3. Note down this no anywhere But except in your mobile as this is the Number which will help trace your mobile in Case of a theft.

4. Once stolen you just have to E-mail this 15 digit IMEI No. to cop@vsnl.net with detail Mentioned below.
 
Your name:____________________
Address:______________________
Phone model:_________________
Make:_________________________
Last used No.:_________________
E-mail for communication:_____
Missed date:___________________
IMEI No :_______________________

      5. No need to go to the police.

      6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system of GPRS and internet, You will find where your hand set is being operated even in case your No. is being changed.

PASS ON THIS VERY
IMPORTANT
MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES.

சனி, 25 ஜூலை, 2015

வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து!!!



வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படுகிறது. மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம் * கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.

டிக்ரீ செர்டிபிகட் அட்டஸ்டேஷன்....


வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு..

முதலில் HRD பண்ண வேண்டும்...இது எவ்வாறு இலகுவாக செய்ய வேண்டும் என்று நான் ஏற்கனவே முக நூலில் தெரிவித்து இருந்தேன்..
HRD-முடித்த பிறகு வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவது...இதையும் நான் இன்று இலகுவாக முடித்தேன்..அல்ஹம்து லில்லாஹ்!
வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவதற்கு டெல்லி எல்லாம் செல்ல தேவை இல்லை....( டெல்லி தான் செல்ல வேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்கள் பீலா விடுவார்கள்)
வெளிநாட்டு அமைச்சக துணை செக்ரடரியேட் சென்னையிலேயே அமைந்துள்ளது.. அமைந்துள்ள இடம்.
7-வது மாடி,
ஈ. வி.கே சம்பத் மாளிகை,
68, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம்,
சென்னை- தொலை பேசி: 044-28272200/28251323.
HRD அட்டஸ்டேஷன் செய்யப்பட்ட கான்வோகசன் செர்டிபிகட் அசல், அதன் ஒரு ஜெராக்ஸ் நகல், பாஸ்போர்ட் நகல் ..இவைகளை எடுத்து கொண்டு மேற்கண்ட அலுவலகம் செல்ல வேண்டும்.
ஒரு படிவத்தை தந்து நிரப்ப சொல்லுவார்கள்.... நிரப்பி கொடுக்க வேண்டும். எந்த வளைகுடா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று அதில் குறிப்பிட வேண்டும்... மேற்கண்ட டாக்குமெண்டுகளை வாங்கி கொண்டு அக்னாலஜ்மென்ட் ஸ்லிப் தருவார்கள்..
"எந்த வித கட்டணமும் இல்லை ".... காலையில் 10 மணிக்கு கொடுத்தால் மாலை 4.30 முதல் 5.30 மணி வரை அந்த ஸ்லிப்பை காண்பித்து பெற்று கொள்ளலாம்..
HRD. EXTERNAL MINISTRY ATTESTATION--போன்ற காரியங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்டுகளே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கேட்ட நிலையில் ஒரு செர்டிபிகட்டிற்கு 1500 ரூபாய் செலவில் மட்டுமே முடிக்கப்பட்டது. இந்த மாதிரியான தகவல்களை முகம் தெரியாத ஒரு முக நூல் நண்பரே முக நூலில் பதிவு செய்து இருந்தார்...
ஆக! இறைவனுக்கும், இறைவன் படைத்த அந்த முக நூல் நண்பருக்கும், முக நூலிற்கும் மிக்க நன்றி..

வெள்ளி, 24 ஜூலை, 2015

தமிழகத்தில் புதிய அகழாய்வு - Tamilnadu Archeology


____________________________________________________
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமப் பகுதியில் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கடந்தவாரம் அகழாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, பெங்களூர் இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளது. இது ஒரு பழம்பெரும் நாகரீகமாகக் கருதப் படுகிறது. ஆய்வு செய்த மத்திய தலைமை அகழ்வாராய்ச்சியாளர். அமர்நாத் ராமகிருஷ்ணன், “வைகைக் கரையோரம் ஆதியில் இருந்த நாகரீகத்தை மேலும் ஆய்வு செய்யலாம்” என்று கூறியுள்ளார்.
வைகை ஆற்றோரத்தில் கிட்டத்தட்ட முன்னூறு தொல்லியல் அடையாளங்கள் கொண்ட பகுதிகள் உள்ளன. இந்த ஆய்வில் அக்காலத்தில் சுட்ட செங்கலால் கட்டப்பட்ட கட்டிட அமைப்பு வகைகள், கூரை ஓடுகள், கண்ணாடி, பவளம், பளிங்குகள், தாழிகள், சுடுமண் பொருட்கள், இரும்பு மற்றும் செப்புப் பொருட்கள், மண்பாண்டத் துண்டுகள், பிராமி எழுத்துகள் என பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன.
இங்கிருந்து ரோமாபுரியுடன் வணிகத் தொடர்புகள் நடைபெற்றதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. நெல்லை அருகே உள்ள ஆதிச்சநல்லூர், மற்றும் அரிக்மேடு, காஞ்சிபுரம், துறையூர், கொற்கை, கரூர், அழகன் குளம் , ஈரோடு, குமரி மாவட்டம் என பரவலாகத் தமிழகம் முழுவதும் தொல்லியல் தரவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிந்துவெளி நாகரிகத்தை விட பழமையான நாகரிகம் திராவிட நாகரிகம் என்று பறைசாற்றக்கூடிய வகையில் இந்த ஆதாரங்கள் இருந்தாலும் மத்திய அரசு இந்த ஆவணங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.
திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆய்வு செய்த ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வறிக்கை, திட்டமிட்டே மத்திய அரசால் பத்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது கண்டனத்துக்குரிய செய்தியாகும்.
தமிழருடைய நாகரிகம் பழமையானது என்று பறைசாற்றப் பட்டுவிடக் கூடாது என்பதில் டெல்லியில் உள்ள சக்திகள் அக்கறை எடுத்துக் கொள்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் தமிழகத்தின் வரலாறே சரியாகப் பதிவு செய்யப்படாமல் மறைக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாறே தென் திசை தமிழகத்தில் இருந்துதான் துவங்குகிறது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. வடபுலத்து வரலாற்றைப் பற்றி எழுதும்போது தோண்டித் துருவி எழுதுபவர்களுக்கு, உண்மையான தமிழக வரலாற்றை எழுத ஆங்கிலேயர் காலத்திலிருந்து மனம் வருவதில்லை.
வரலாற்றில் உண்மைகள் இருக்கவேண்டும். வரலாற்றை மறைத்தால் நேர்மையை அடகுவைப்பது போன்றதாகும். தமிழகத் தொல்லியல் தரவுகள் இன்னும் ஆய்வு செய்யப்படவேண்டிய இடங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
தினமணி ஏட்டில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து வெளியான எனது இரண்டு கட்டுரைகள் :
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-07-2015.


ஒரு முன்மாதிரி திருமணம்

Syedali Faizi's photo.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில்
ஒரு முன்மாதிரி திருமணம்
===================================================
ஒரு பக்கம் மஹர் தொகையை பெண்கள் உயர்த்தி கோருவதால் ஆண்கள் கூட்டம் விழி பிதிங்கி கொண்டிருக்கிறது சில நாடுகளில்
மறுபக்கம் வரதட்சணை என்ற கொடிய நோயால் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி கொண்டுள்ளனர் பல நாடுகளில்
இந்த இரண்டில் இருந்தும் மாறு பட்டு நியாயமான முறையில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார் பாலஸ்தீனை சார்ந்த ஒரு இஸ்லாமிய இளம் பெண்
தனது மஹராக மிக குறைந்த அளவில் ஒரு டாலரின் மதிப்பைவிட் குறைந்த மதிப்பிலான தொகையை பெற்று கொண்டு தனது கணவனை கரம் பிடித்தார் அந்த பாலஸ்தீனத்தை சார்ந்த இளம் பெண்
அந்த காட்சியை தான் படம் விளக்குகிறது
பின் வரும் லின்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்து நமது பக்கதெ்தோடு இணைந்து கொள்ளுங்கள்

நீதி நீதி நீதி

Quran

நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும்.
(அல்குர்ஆன்: 16:94,95)

கிரயப் பத்திரம் { LAND DOCUMENT }தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

Mohandass Samuel's photo.

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று கிரயப் பத்திரம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.
கிரயப் பத்திரம்:
கிரயப் பத்திரம் பெற பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும்.
காவல்துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் அல்லது உறுதிமொழி ஆணையர் (OATH COMMISSIONER) முன்பாக பிறப்பிக்கப்பட்ட உறுதிமொழி (AFFIDAVIT), சர்வே எண் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தர வேண்டும்.
ஆவணக் கட்டணம் ரூ.100. இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ.20 கட்ட வேண்டும்.
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
இதற்கு பிறகு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும்

வியாழன், 23 ஜூலை, 2015

மாத விலக்கு பிரச்சனை தீர மாதுளை பூ சாப்பிடுங்க..!

ஆயுர்வேதம் &  சித்த மருத்துவம்.'s photo.


மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
மாதுளம்பழத் தோலின் பயன்கள்
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் நன்கு மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

புதன், 22 ஜூலை, 2015

சுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..!

ஆயுர்வேதம் &  சித்த மருத்துவம்.'s photo.


• அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.
• அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
• போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.
• அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.