சனி, 4 ஜூலை, 2015

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை மருத்துவம் !

Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.

குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.
சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
வெளியேறும்.
கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்
வெளியேறும்.
கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்
வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.
வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்
சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.

Related Posts: