ஞாயிறு, 26 ஜூலை, 2015

தங்கம் விலை

தங்கம் விலை குறைவது மோடியால் அல்ல (சாப்பாட்டு) கல்யாண ராமா......
**********************************************************************************
தங்கம் விலை குறைவதற்கு உலகளாவிய பொருளாதார அடிப்படையின் படி இரண்டே காரணங்கள் தான் உள்ளன.
1. எந்த ஒரு பொருளும் திடீரென தேவைக்கு அதிகமாக வருமேயானால் அந்த பொருளின் விலை குறையும் என்பது "கிராமத்து மூலையில்" பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு கூட தெரியும்.
அந்த அடிப்படையில் உலக சந்தையில் தற்பொழுது தங்கத்தின் வரத்து அதிகமாகி வருவதனால் விலை குறைந்து கொண்டு வருகிறது.
ஏன் திடீரென தற்பொழுது - அதுவும் எங்கள் மோடி அண்ணன் பிரதமராக இருக்கும்பொழுது மட்டும் தங்கம் வரத்து அதிகரிக்க வேண்டும்.....? இது உனது அடுத்த கேள்வி.....இலையா......ராமா.....?
ராமா.... இந்தியாவில் வரத்து அதிகரிக்கவில்லை.....தற்பொழுது "கிரீஸ்" நாடு தமது நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற தங்களது அரசு கையிருப்பு தங்கத்தை விற்று "அமெரிக்க டாலர்" சேமிக்க துவங்கியுள்ளார்கள்....
இதனால் உலக சந்தையில் தங்கம் தேவையை விட மிகுதியாகிறது.
இதுவல்லாமல் சைனா, தென்கொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த வருடம் புதிய தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, படிப்படியாக அவற்றின் செயலபாடுகளும் வரத்துவங்கி விட்டது.
இப்படி தேவையை காட்டிலும் அதிகமாக வரத்து உள்ளதால் தங்கம் விலை குறைந்து கொண்டே செல்கிறது.
2. தங்கம் தேவையை மீறி வருவதனால் இது வரை தங்கத்தின் மதிப்பின் மீது நம்பிக்கை கொண்டிருந்த உலக முதலீட்டார்கள், அவர்களது கை இருப்பு தங்கத்தை விற்று "அமெரிக்க டாலரில்" முதலீடு செய்ய துவங்கி விட்டனர்.
இதனாலும் தானாகவே தங்கத்தின் மதிப்பு குறைவதோடு "அமெரிக்க டாலரும்" வலுப்பெற்று வருகிறது.
உண்மை நிலை இவ்வாறிருக்க "அண்டப்புளுகு - ஆகாசப்புளுகு அவிழ்த்துவிடும் கல்யாண ராமர் போன்ற அறிவாளிகள்?????? கொஞ்சம் யோசித்து கதைகள் கட்டுவது, கொஞ்சமேனும் அவர்களது மரியாதையை காப்பாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும்.
--T.H.M K