திங்கள், 27 ஜூலை, 2015

நாடு நீதிக்கான மக்கள் புரட்சியை நோக்கி நகரும்

 நாடு நீதிக்கான மக்கள் புரட்சியை நோக்கி நகரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நீண்ட சிறைவாசம், பொய் வழக்குகள், காவல் கொலைகள், போலி என்கௌண்டர், இஸ்லாமிய இயக்கங்களுக்குத் தீவிரவாத முத்திரை குத்துதல் என ஒரு பக்க சார்பாய் முஸ்லிம்கள் தொடர்ந்து இந்திய நாட்டில் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.
இனப்படுகொலைகள், மக்கா மசூதி, அஜ்மீர், மலேகான், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் போன்ற குண்டு வெடிப்பு வழக்குளில் குற்றம் நிருபிக்கப்பட்ட சாத்வி பிரக்யா போன்றோருக்கு ஒரு நீதியும் குற்றம் நிரூபிக்கப்படாமல் நாட்டின் பொதுமனசாட்சி என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன்னொரு நீதியும் காட்டுவது ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது.
குழந்தை, பெண்கள் என நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்தது நிரூபிக்கப்பட்டு ஆயுள்தண்டனையே விதிக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி போன்றோர் சுகமாக, சுதந்திரமாக நாட்டில் உலா வர அனுமதிக்கப்பட்டிருக்கும் இதே காலகட்டத்தில், குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படாமலேயே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் யாகூப் மேமனின் தண்டனை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு நீதி இல்லை என்பதைத் தெள்ள தெளிவாக எடுத்துரைக்கிறது.