வியாழன், 16 ஜூலை, 2015

கோவை மாநகரில் 1997.

நவம்பர்.29,30. டிசம்பர்.1,2,3. ஆகிய தேதிகளில் போலீஸ் மற்றும் சங்பரிவார கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான இன கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்,தொழில் ஸ்தாபனங்கள், நடைபாதை வியாபார கடைகள்,காவல் துறையின் துணையோடு சங்பரிவார கும்பலால் சூறையாடபட்டு.தீக்கிரையாக்கபட்டது.
இக்கலவரத்தில் 550 கோடிக்கும் மேலான முஸ்லிம்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது.மற்றும் தீக்கிரையாக்கபட்டது.
கலவரம் நடைபெற்ற போது மாநில முதலமைச்சர்.கருணாநிதி.
இக்கலவரத்தில் காவல்துறையால் சுடபட்டும்.சங்பரிவார கும்பலால் வெட்டபட்டும், எரிக்கபட்டும் 18 முஸ்லிம்கள் மரணமடைந்தாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் 32 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலவரத்தில் 40க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காயமடைந்தனர்.
கலவரத்தில் பலியானவர்களின் பெயர்கள்.
1.சி.ஐ.ஹபீப் ரஹ்மான்.
2.km. முஹமது அப்பாஸ்.
3.A.உபைது ரஹ்மான்.
4.K.முஹமது ஹாரிஸ்.
5.S.சாகுல் ஹமீது.
6.காஜா உசேன்.
7.K.M.அபுபக்கர் சித்தீக்
8.நாஸர்
9.A. ஆரிஃப்
10.ஹபீப் ரஹ்மான்
11.M.அப்துல் ஸலாம்
12.R.சுல்தான் பாஷா
13.A.H.ஹபீபுல்லாஹ்
14.காஜா மஸ்தான்
15.சாகுல் ஹமீது
16.லியாகத் அலி
17.A.அப்பாஸ்
18.அபூபக்கர்.
காரணம்...
அல் உம்மா பொது செயலாளர் அன்சாரி குறித்து B1.காவல் நிலைய அதிகாரி தரக்குறைவாக பேசியதை தொடர்ந்து கோபமுற்ற முஸ்லிம் இளைஞர்கள் உக்கடம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த காவலர் செல்வராஜ் அவர்களை கொலை செய்தனர்.
கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முஸ்லிம்கள் அதிகம் வசிக்ககூடிய கோட்டைமேடு பகுதிக்குள் நுழையமுயன்ற காவல்துறை அதிகாரிகளிடம் த.மு.மு.க நிர்வாகிகள்.ஜமாத் நிர்வாகிகள். அல் உம்மா பொருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காலை 11 மணிக்குள் நாங்கள் பிடித்து ஒப்படைக்கிறேம் என்று வாக்குறுதி அளித்தனர்.
அந்த நேரத்திலேயே உக்கடம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளின் கைவண்டிகளை சரக்குகளுடன்.போலீஸசாரால் தீ வைக்கப்பட்டது.
ஒரு பேருந்தும் சில வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
தொடர்ந்து வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டது.
வாக்குறுதி அளித்தவாறு கொலையில் சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்கள
ென்ட் ரோடு.நாஸ் தியேட்டர் சந்து.பெருமாள் கோயில் வீதி உக்கடம் பகுதிகளில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி யது.
தொடர்ந்து ஞாயிறு இரவு.திங்கள்.செவ்வாய் வரை துப்பாக்கி சூடு தொடர்ந்து.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த முஸ்லிம் இளைஞர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நான்கு முஸ்லிம்கள் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் முன்னிலையிலேயே எழுத முடியாத அளவு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.அதிலும் குறிப்பாக டி.ஏ.ஹபீப் ரஹ்மான் என்ற சகோதரனை மருத்துவமனை முன்புறம் ஆயுதங்களுடன் இருந்த மப்டி காவல்துறை சேர்ந்தவர்கள் மற்றும் சங்பரிவார கும்பலும் சேர்ந்து தாக்கியதில் உயிருக்கு போராடிய நிலையில் விழுந்து கிடந்தபோது அருகில் இருந்த சில காவலர்கள் காவல்துறை வாகனத்தில் இருந்து எரிபொருளை எடுத்து அவரின் மீது ஊற்றி தீ வைத்து உயிரோடு எரித்து கொன்றதை அப்போதைய நாழிதல்கள் அம்பலப்படுத்தியது .அதுபோலவே அப்போதைய த.மு.மு.க வின் மாநகர செயலாளர் அய்யூபின் சகோதரர் ஆரிப் அவர்களும் கொல்லப்பட்டர்.
ஒருபுறம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இளைஞர் கள் வெளியே வராமல் இருக்க தடுப்பு காவல் போடபட்டது.
அதேநேரத்தில் முஸ்லிம்களின் வியாபார நிருவன ங்களையும் வீடுகளையும். சங்பரிவார கும்பல் காவல்துறையின்
ஆசியோடு கொள்ளை அடித்தும்.தீ வைத்தும் கொளுத்தினார்கள்.
ஞாயிறு அன்று மதியம் ஆரம்பிக்கப்பட்ட கொள்ளை செவ்வாய் வரை நீடித்தது.மூன்று நாட்களில் 500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் நாசமாக்கபட்டது.
அந்த காலத்தில் தென்இந்தியாவின் மிகப்பெரிய துணிக்கடையான ஷோபா கொள்ளை யடித்து எரிக்கப்பட்ட போது அதன் உரிமை யாளர்கள்.காவல்துறை ஆணையாளர்.மாநில அமைச்சர்.டி.ஜி.பி.மத்திய அமைச்சர்கள்.தமிழக முதல்வர் ஆகியோர்களை போனில் தொடர்பு கொண்டு.காப்பாற்ற கோரியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலவரத்திற்கு காரணமான காவல்துறையினரை யும்.சங்பரிவார கும்பலை சோர்ந்வர்களையும் கைது செய்யும் வரை ஜனாசாக்களை வாங்க மாட்டோம் என்று
பேராசிரியர் MHJ அவர்களின் தலைமை யில் சமுதாயம் ஒன்று பட்டு நின்றது.
ஏ.டி.ஜி.பி குமாரசாமி .அமைச்சர்களும்.கலெக்டர் சந்தானம் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவில் முஸ்லிம்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றும் அரசுக்கு தெரியபடுத்துவோம் என்றும் உறுதி கூறப்பட்டது.
டிசம்பர் 3.1997.புதன்கிழமை ஜனாஷாக்கள் பெறப்பட்டு கோட்டைமேடு. மன்ப உலும் பள்ளியில் பார்வைக்கு வை
ை காலையில் காவல்துறை யிடம் முஸ்லிம்கள் ஒப்படைத்தனர்.
அஞ்சலி ஊர்வலம் என்ற பெயரில் சங்பரிவார கும்பலும் காவல்துறை யும் இணைத்து கலவரத்திற்கு தூபம் போட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்த து.அதை உறுதிபடுத்தும் விதமாக காவலர் செல்வராஜ்க்கு அஞ்சலி செலுத்த மருத்துவ மனைக்கு சென்ற கோவை மேற்கு தொகுதி தி.மு.க. MLA.தண்டபாணி மற்றும் அவரது மகன் ரவியும். அர்ஜுன் சம்பத் தலைமையிலான சங்பரிவார கும்பல் மற்றும் மப்டியில் இருந்த போலீசாரால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வந்தது.
இச்சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனை வாளாகத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பல் ஆயுதங்களுடன் கோஷங்களை எழுப்பிய வாரே பெரியகடை வீதி க்குள் புகுந்து முஸ்லிம்களின் வியாபார நிருவனங்களை அடித்து நொருக்கினர்.
கடைவீதி சந்திப்பில் த.மு.மு.க வின் டிசம்பர் 6.போராட்டத்திற்காக வைத்த பேனர்களையும் கட் அவுட்களையும் அடித்து நொருக்கி தீ வைத்தனர்.
காட்டுமிராண்டித்தனமான நாச வேலைகளில் ஈடுபட்ட இவர்களை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது.
இந்த நேரத்தில் இன்னொரு 500க்கும் மேற்பட்ட வன்முறை கும்பல் உக்கடம் கெம்பட்டி காலனியிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டது.
தங்களது வியாபார நிறுவனங்கள் சூறையாடப்படுவதை கேள்விபட்டு.தங்களது வாழ்வாதரத்தை காப்பாற்ற முஸ்லிம்கள் உக்கடம் பகுதியில் குவிந்தனர்.உடனே சங்பரிவார கும்பல் முஸ்லிம்களை தாக்க ஆரம்பித்தனர். இருதரப்பு ம் மோதிய அந்த சம்பவம் போர்களம் போல்இருந்தது அந்த சமயத்தில் அருகில் உள்ள லாட்ஜில் மாநில நிர்வாகிகளுடன் இருந்த அனைத்து த.மு.மு.க நிர்வாகிகளும் களத்திற்கு பறந்து வந்தனர்.சகோதரர்களை அமைதிபடுத்தி அருகில் உள்ள வின்சென்ட் ரோட்டுக்கு நகர்த்தினார்.
அந்த நேரத்தில்........
அருகில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதியில் த.மு.மு.க நிர்வாகிகளும் பெயரில்லாத அமைப்பின் நிர்வாகிகளும் ஜமாத் நிர்வாகிகளும் நின்று மக்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மாசானமுத்து ஏ.சி.தலைமையில் வந்த காவ(வி)ல் துறை எந்த விதமான எச்சரிக்கை நடைமுறைகளையும் பின்பற்றாமல் முஸ்லிம்களை சரமாரியாக துப்பாக்கி யால் சுட்டனர்.அப்பொழுது தான் மாநில நிர்வாகிகளுடன் பேசிவிட்டு லாட்ஜில் இருந்து இறங்கி வந்த சாகுல் அமீது உட்பட பலபேர் இத்துப்பாக்கி சூட்டில் அதே இடத்தில் ஷகித் ஆனார்கள். அய்யூப் உட்பட பல நிர்வாகிகள் பலத்த காயமடைந்தனர்.
அதைதொடர்ந்து மாசானமுத்து தலைமை யில் சென்ற காவல்துறை வண்டிக்காரவீதி.வின்ச
க்கபட்டு மாலை ராணுவ பாதுகாப்புடன் கோவை காளவாய் கபார்ஸ்தானில் நல்லடக்கம் செய்யபட்ட து.(அவர்களது மரணத்தை இறைவன் ஷகிதாக அங்கீகரிப்பானாக) பிறகு பேராசிரியரின் உரை நடைபெற்றது.
அந்த கணமும் கலவரமும் மறக்க முடியமா? அந்த நேரத்து உணார்வுகளை விவரிக்க வார்த்தைகள் உண்டா?
பேராசிரியரின் உரையின் கடைசி வார்த்தை இன்னும் காதில் ஒழிக்கிறது....
அமைதியாக கலைந்து சொல்லுங்கள்..நமக்கான காலம் விரைவில் வரும்..
அன்று நாங்கள் கலைந்து செல்லவில்லை...கண்ணீரில்
கரைந்து சென்றோம்..
வரலாறு நம் கண் முன் விரிகிறது.
உணார்ச்சி வசப்படுவது கோவை முஸ்லிம்களுக்கு உயிருடன் கலந்தது பாதிப்பிற்க்கு எதிர்வினை ஆற்றியவர்கள் இன்றும் சிறைகளில் .ஆனால் கலவர குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக..
காத்திருக்கிறேம் அவர்களை காப்பாற்றியவர்கள் சிறை செல்வதை பார்ப்பதற்க்காக..
இந்த1997 நவம்பர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குகாக த.மு.மு.க வின் சார்பாக சுமார்.2.75 கோடி (இன்றைய மதிப்பு 18.5 கோடி)நிவாரணமாக வழங்கபட்டது.
கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா.2லட்சமும்.வீடு இழந்தோர் மற்றும் வியாபார நிறுவனங்கள்
பாதிக்கப்பட்டோருக்கு.பாதிப்புக்கு தகுந்தவாறு 5லட்சம் முதல் 20ஆயிரம் வரை சுமார் 600 பேருக்கும் 1லட்சம் வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகங்களும் நிதியாக த.மு.மு.க வின் சார்பாக வழங்கபட்டது.