பான் கார்டில் புதிய கையெழுத்தை மாற்ற என்ன செய்ய வேண்டும் ?
இதற்கு நீங்கள் முதலில் புதிய பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் கையெழுத்து மாற்றம் செய்வதால், புதிய பான் கார்டு தேவை என்பதைக் குறிப்பிடுவது நல்லது. இந்த கார்டு கையெழுத்து மாற்றம் செய்வதற்காக மட்டும்தான். பெயர், பிறந்த தேதி, முகவரி, இனிஷியல் என வேறு எதுவும் மாற்றம் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அடுத்து, ஏற்கெனவே உள்ள கையெழுத்து மற்றும் புதிதாக மாற்ற நினைக்கும் கையெழுத்து ஆகிய இரண்டுக்கும் நோட்டரி பப்ளிக் அல்லது அரசு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி அதை பான் கார்டு வழங்கும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பான் கார்டு வாங்குவதற்குக் கட்டணம் இருக்கும். இதைச் செலுத்தி புதிய கையெழுத்திட்ட பழைய எண் கொண்ட பான் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.