அல்ஹம்து லில்லாஹ்!
துருக்கியின் ஜனநாயகத்தை களவாட முயற்சித்த நயவஞ்கர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.
நேற்றிரவு உலகத்தையே சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுதான் துருக்கிய இராணுவத்திலுள்ள சதிகாரர்களின் புரட்சி தொடர்பான அறிவிப்பு.
இதன் பின்னால் அதிசக்திவாய்ந்த அரபு , மேற்கு நாடுகளின் தலைவர்களும் துணை போயினர். ஆனால் துருக்கியின் ஜனநாயக மக்கள் துணைபோகவில்லை.
இரவோடு இரவாக வீதிக்கிறங்கிய துருக்கிய மக்கள் சதிகாரர்களின் சூழ்ச்சியை முறியடித்து நல்லாட்சியை உறுதிப்படுத்தினர். இதன்போது 60க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஷஹீதாக்கப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுமுள்ளனர்.
நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்திய இராணுவ சதிகாரர்களும் உடனடியாக கைதுசெய்யப்பட்டு மூக்குடைபட்டனர்.






















