சனி, 9 ஜூலை, 2016

நடத்துநர்க

அன்பு நண்பர்களே இவர் பெயர் கலையரசன் பணி நியமன ௭ண் 309/1988,சித்தேரியை சேர்ந்த இவர் T6 பேருந்தின் நடத்துனர், அரக்கோணம் சோளிங்௧ர் வழித்தடத்தில் சுமார் பத்து வருடங்களாக வேலை செய்கிறார். பொதுவாக இலவச பஸ் பாஸ்வுடன் வரும் பள்ளி மாணவர்களை பார்த்து சிடு சிடு என்று கோபப்படுவார்கள் நடத்துனர்கள். மேலும் பேருந்து நிலையத்தில் மாணவர்களை கண்டால் பேருந்தை தள்ளி நிறுத்துவார்கள், ஆனால் அவர்களுக்கு மத்தியில் T6 பேருந்தின் நடத்துனர் கலையரசன் அவர்கள் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் அமரும் இருக்கை முழுவதும் மாணவர்களின் புத்தகப்பைகலை வாங்கி அடுக்கி கொள்கிரார், பேருந்து முழுமையானாளும் கூட ஒரு மாணவன் மாணவியையும் விடாமல் சரி செய்து ஏற்றி வைப்பார், கலையரசன் நடத்துநர் என்றால் பயணிகள் அனைவருக்கும் பிடிக்கும், மாணவர்களை படியில் நிற்காமல் பார்த்துக்கொள்கிரார், இவரைப்போன்ற நடத்துநர்களை யாரும் பாராட்டுவதில்லை, இவரை உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் இதனை அந்த நடத்துனர் கலையரசன் அவர்கள் பார்த்து மகிழட்டும். 🚌

Related Posts: