சனி, 16 ஜூலை, 2016

கஷ்மீர்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியஅனுபம் கெர்

கஷ்மீரில் புர்ஹான் வாணி கொல்லப்பட்டத்தை அடுத்து நடந்த போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான பாதுகாப்பு படையினரின் தாக்குதல் ஆகியவற்றால் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் பலர் படுகாயமடைந்துள்ள இந்த வேளையில் அங்கு நடக்கும் வன்முறையை மேலும் பெரிதாக்கும் வகையில் பிரபல நடிகர் அனுபம் கெர் கஷ்மீரி பண்டிட்களின் சிதைக்கப்பட்ட உடல் என்று கூறி 1998 ஆம் ஆண்டு நடந்த வந்தாமா படுகொலையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அனுபம் கெர் இன் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அவர் சமூக வலைதளங்களில் வெறுப்பினை தூண்டுகிறார் என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் பகிர்ந்த புகைப்படத்தினால் உந்தப்பட்டு மேலும்  500 பேர் கொல்லப்பட்டால் என்னாவது என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும், அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற தருணங்களில் இறந்து போன உடலை வைத்து அரசியல் செய்வது வெட்கக்கேடானது என்று ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர், அனுபமின் இந்த செயல் பழிவாங்கும் எண்ணத்தில் மக்களை தூண்டிவிடுவது என்று கூறியுள்ளார்.
வெறுப்பை தூண்டுவதற்கு 26 ஆண்டுகள் பழமையான புகைப்படத்தை பகிர்ந்த அனுபம் கெர் ஒரு வெறியர் என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

thanks to 

Related Posts: