துருக்கியில் ஆட்சியை கைபற்றிய இராணுவத்தின் சதிகள் முறியடிக்கப்பட்டு ராணுவம் சரணடைந்தது
.மக்களை தெருவிற்கு இறங்க தூண்டிய துருக்கி அதிபரின் எழுச்சி உரை..
.. இஸ்தான்புல்: புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக ராணுவம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்தார் அதிபர் எர்டோகன். நாட்டு மக்கள் நினைத்தால்தான் தன்னையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்று எர்டோகன் உணர்ந்திருந்தார். இதையடுத்து, ராணுவத்திற்கு எதிராக, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என எர்டோகன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதிகளுக்கு இறங்கினர்.
.ராணுவ பீரங்கிகளை முன்னேற விடாமல் மக்கள் திண்டு போராட்டம் நடத்தினர். ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாக டாக்சிம் சதுக்கத்தில் பொதுமக்கள் ஒன்று கூடினர்.
இந்நிலையில், வேறொரு நகரில் சுற்றுப் பயணத்தில் இருந்த எர்டோகன், இன்று அதிகாலை இஸ்தான்புல் நகரிலுள்ள அட்டதுர்க் முக்கிய விமான நிலையம் வந்திறங்கினார்.அங்கு ஆதரவாளர்களும், பொதுமக்களும் கூடி எர்டோகனுக்கு ஆதரவாக கோஷமெழுப்பினர். அவர்கள் மத்தியில் எழுச்சிமிகு உரையாற்றினார் எர்டோகன்.
.எர்டோகன் கூறியதாவது: துருக்கியில் எற்பட்டுள்ள ராணுவ புரட்சிக்கு ஐரோப்பாவிலுள்ள இஸ்லாமிய, மதகுரு பெதுல்லா குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலரும் தான் காரணம். சதி திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டி வரும்.
துருக்கி நாட்டின் நேர்மை மற்றும் ஒற்றுமையை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல் தேச துரோகம். ராணுவ தளபதி எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. புரட்சியில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.மக்களின் துப்பாக்கியை மக்களுக்கு எதிராகவே திருப்பியுள்ளனர். மக்கள் ஆதரவோடு அமைந்த இந்த அரசை சதி செய்து கலைக்க முடியாது. நாம் சதிகாரர்களுக்கு எதிராக நிற்கும் வரை அவர்களால் நம்மை எதுவும் செய்துவிட முடியாது.
.இவ்வாறு அவர் பேசினார்.
.இவ்வாறு எர்டோகன் பேசிக்கொண்டிருந்ததை நேரடியாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் காண்பித்தன.
.அப்போது, புரட்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் பீரங்கிகளை கைவிட்டு, இறங்கி, கையை உயர்த்தி சரணமடைந்த காட்சிகளையும், டிவி சேனல்கள் காண்பித்தன.
செய்தி முன்னேற்றம்:
.• துருக்கி ஜனாதிபதி எர்துகான் இஸ்தான்புல் வருகை. பொதுமக்கள் இராணுவத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அனைத்து பள்ளிவாசல்களிலும் பாங்கு ஒலிக்குமாறு வழிபாட்டுத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை நடந்த குழப்பத்தில் ஏறத்தாள 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பான்மையினர் பொதுமக்கள்.
காவல்துறையினர் மேல் ராணுவத்தினர் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் 17 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
. துருக்கிய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது .இஸ்தான்புல் விமான நிலையத்திலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக உறுதி படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கிய பிரதமர் பினாளி இல்டிரிம் இந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்பு முயற்ச்சியை, “அதிகார சங்கிலியின் வெளியே நடத்தப்பட்ட சட்ட விரோத நடவடிக்கை” என்று கூறியுள்ளார். இதுவரை இராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு உதவிய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பல பகுதிகளில் பொதுமக்களிடம் ராணுவத்தினர் சரணடைந்து வருகின்றனர் போஸ்போரஸ் பாலத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த டாங்கிகளை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர் இராணுவத்தின் சதிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
முந்தின முதல் தகவல்
துருக்கியில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் இராணுவம்
துருக்கியில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் இராணுவம் இறங்கி உள்ளது. நாட்டின் ஊடகங்கள், விமான நிலையங்கள் அனைத்தும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருகின்றது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
.இது குறித்து அலைபேசி மூலம் கருத்து தெரிவித்துள்ள எர்துகான், இதிலிருந்து மீண்டு வருவோம் என்று கூறியுள்ளார். இந்த இராணுவ ஆட்சி கவிழ்பிற்கு எதிராக வீதில் இறங்கி போராடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சதித்திட்டம் தீட்டியவர்கள் இதற்காக பெரியதொரு விலையை கொடுக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தற்பொழுது உள்ள அந்நாட்டின் TRT செய்தித் தொலைகாட்சி இராணுவத்தின் உத்தரவிற்கேற்ப செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. அதில், எர்துகானின் அரசு ஜனநாயக மற்றும் மதசார்பற்ற கொள்கைகளை அழித்துவிட்டதாகவும், இனி அந்நாடு அமைத்திக் குழு ஒன்றினால் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் கருத்தாக ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், “தற்போது நடந்துள்ள ஆட்சி கவிழ்ப்பு ஒன்றிரண்டு தளபதிகள் இணைத்து நடத்தியது போல் தெரியவில்லை” என்றும் “மாறாக நன்றாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு” என்று கூறியிருக்கிறது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து விமான நிலையங்கள், ஊடகங்கள் மற்றும் இஸ்தான்புல்லின் அனைத்து முக்கிய இடங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.இது குறித்து ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில்,, “ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் “உயிர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார். துருக்கியை ஒட்டியுள்ள கிரீஸ் நாட்டில் பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினர் அவசர ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா துருக்கியின் ஜனநாயக ஆட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ரஷ்யா, துருக்கியில் உள்ள தனது குடிமக்களை மீட்டு வர முயற்சிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும் துருக்கி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளட்டும் என்று புடின் அறிவுரை கூறியுள்ளார்.
thanks to (kaalaimalar)