இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது.
உத்தரகண்ட் போலி என்கவுன்டர் வழக்கின் தீர்ப்பு
உத்தரகவுன்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரண்பீர் சிங் என்ற எம்பிஏ பட்டதாரி போலி என்கவுன்டாில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிபிஅய் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் மனித உயிர்களுக்கு எவ்வித மரியாதையும் கிடையாது என்ற மனக்கட்டமைப்பு காவல்துறையினரிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. அதனால்தான் போலி என்கவுன்டர் பிற நாடுகளைக் காட்டிலும் இங்கு மிக அதிகமாக நடைபெறுகிறது.துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.எடுத்தவுடன் துப்பாக்கிச் சூடு நடத்தாமல், எச்சாிக்கை, தடியடி என்ற கட்டங்களைத் தாண்டவேண்டும்.சுட வேண்டிய தேவை ஏற்பட்டாலும், இடுப்புக்குக்கீழேதான் சுடவேண்டும். சுட நேர்ந்த நிகழ்வு குறிததும், நேரம் குறித்தும், சுட வழங்கப்பட்ட ஆணை குறித்தும் விரிவாகப் பதிவு செய்ய வேண்டும்.ஆனால் நம் காவல் துறைக்கு அதுபற்றியெல்லாம் அக்கறை ஏதும் கிடையாது. சுட்டபின், ஏதாவது கதை அளந்துகொள்ளலாம் என்பதுதான் நடப்பாக உள்ளது.உத்தரகவுன்ட் வழக்கிலும் இப்படிப்பட்ட கதை புனையப்பட்டதை நீதிமன்றம் கண்டித்துள்ளது. இப்படிப்பட்ட தீர்ப்புகள் சிறிதேனும் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால், அவற்றை வரவேற்பது சனநாயக சக்திகளின் கடமையாகும்.
T S Arunkumar
T S Arunkumar