வெள்ளி, 24 நவம்பர், 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிப்பு? November 24, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பணப் பட்டுவாடா உள்ளிட்ட புகாரை தொடர்ந்து, தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம், இது தொடர்பாக 29 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டது. 

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டெல்லி சென்றுள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Related Posts: