திங்கள், 11 ஜூலை, 2016

டைம்ஸ நவ் நிரூபரை திக்குமுக்காட வைத்த ஜாகிர் நாயக்

– கடைசி வரை சவாலை ஏற்காத டைம்ஸ் நவ், போனில் நடந்த அதிரடி விவாதம்

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் நிரூபர் மேகா என்பவர் ஜாகிர் நாயக் உடன் தொலைபேசியில் உரையாடி இன்று பேட்டி எடுத்துள்ளார். முதல் பேட்டி தங்களுக்கு சாதகமாக வராததால் அடுத்த ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் ஜாகிர் நாயக்கிற்கு போன் செய்கின்றார் டைம்ஸ் நவ் மேகா ”தொழில்நுட்ப கோலாறிகிவிட்டது மீண்டும் ஒரு முறை பேட்டி தாருங்கள்” என அதில் கேட்கின்றார். (தொழில்நுட்ப கோலாறிகிவிட்டது என்பது அப்பட்டமான பொய் என்பது வீடியோவை பார்ப்பவர்களுக்கு புரியும்)
ஜாகிர் நாயக் அவர்கள் மீண்டும் மேகாவிடம் போனில் பேசுகின்றார். ஆரம்பத்தில் அவர் பேட்டி எடுத்த விதமும் இரண்டாவது அவர் பேட்டி எடுத்த விதமும் டைம்ஸ்நவ் டிவி எந்த அளவிற்கு விலைபோகியுள்ளது என்பதையும் அதன் இரட்டை முகத்தையும் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றது.
பல்வேறு அறிஞர்கர்களிடம் நேரடியாக விவாதம் செய்த ஒருவரிடம் நாம் கேள்வி கேட்ட போகின்றோம் என்பதை அறியாத டைம்ஸ்நவ் நிரூபர் ஜாகிர் நாயக்கிடம் வசமாக மாட்டி சிக்கி சின்னாபின்னமாவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.
டாகா சம்பத்திற்கு பின்னால் ஜாகிர் நாயக் தான் இருக்கின்றார் என டிவியில் முழங்கிய டைம்ஸ் நவ், ஒரு கட்டத்தில் ”உங்களுக்கு இதில் நேரடியாக தொடர்பு இல்லை”  எனக் கூறுவதை இதில் காண முடிகின்றது.
”முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ஆகுமாறு” கூறியுள்ளீர்களே என அந்த பெண் கேட்ட பொழுது:
”போலிஸ் நிழல் உலக தாதாக்களுக்கு டெரரிஸ்ட்டாக திகழ்கின்றார்கள்” என அவர்களது டைம்ஸ்ஆஃப்இந்தியாவில் வந்த செய்தியின் தலைப்பை ஜாகிர் நாயக் சுட்டிக்காட்டி நிரூபரின் மூக்கை உடைத்ததையும் இந்த வீடியோவில் காண முடிகின்றது.

Related Posts: