சனி, 16 ஜூலை, 2016

மதுரை போலி வெடி குண்டு வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மதுரை CBCID SID போலிசார் பொய்யாக கைது செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து...
சமுதாய தலைவர்களின் பார்வை மதுரையின் மீது திரும்பியுள்ளது....
இந்நிலையில் இன்று ஜாகீர் நாயக் விவகாரத்தில் ஜனநாயக போராட்டத்தின் மூலம் சமூகத்தின் எதிர்ப்பை பதிவு செய்ய மதுரை வந்திருந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், முன்னால் சட்டமன்ற உருப்பினருமான பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ...
பொய் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சகோதரர்களின் இல்லத்திற்கு சென்று விபரங்களை கேட்டறிந்தார்
மேலும் கடந்த காலங்களில் சட்டபேரவை காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது மதுரை போலி வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக தான் பேசியதையும் நினைவு கூர்ந்தார்..
மேலும் பொய் வழக்கு சம்மந்தமாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து இதுவரை அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்த விபரங்களை தமக்கு அனுப்புமாறும்,மேற்கொண்டு பொய் வழக்குகள் தொடராமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதோடு மட்டுமல்லாமல் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் அவ்வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சிப்போம் எனவும் கூறியுள்ளார்...
தமுமுக மாநில தலைவர் Jsr Moulavi மெளலவி ரிஃபாயி அவர்கள் இது சம்மந்தமாக விரிவான ஆலோசனை செய்து பொய் வழக்கில் கைது நடவடிக்கை தொடராமலும்,பாதிக்கப்பட்ட இளைஞர்களை வழக்குகளிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்
இந்தியதேசிய லீக்கட்சி இது சம்மந்தமாக அரசுக்கு கண்டனம் தெரிவித்து,காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் எதிர்பை பதிவு செய்ததோடுமட்டுமல்லாமல்
கண்டன சுவரொட்டிகள் மூலம் அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது..
மேலும் வரும் வார அரசு வேலை நாட்களில் பொய் வழக்குகளுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் தடா.ஜெ.அப்துர் ரஹீம் தெரிவித்துள்ளார்
Madurai Ali

Related Posts: