10 மாதங்களில் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ள முதலீடுகள்
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், பொறுப்பு ஏற்றது முதல் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், மே 07-ஆம் தேதி பொறுப்பு ஏற்றது முதல் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஜூலை-20, 2021 அன்று 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, அந்த ஒப்பந்தகள் மூலம் 17,141 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதனால் 55,054 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.
அதேபோல, செப்டம்பர்-11, 2021 அன்று மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தினால், 2,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. அதனடிப்படையில் 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, செப்டம்பர்-22, 2021 அன்று 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, அந்த ஒப்பந்தகள் மூலம் 1,880.54 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது, அதன்மூலம் 39,150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, நவம்பர்-23, 2021 அன்று 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 35,208 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால் 76,795 வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டது.
2022-ஆம் ஆண்டில் என்ன மாதிரியான முதலீடுகளை ஈர்ப்பார் தமிழ்நாடு முதலமைச்சர் என பேசப்பட்ட நிலையில், மார்ச்-7, 2022 ஆம் தேதி 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தகள் மூலம் 4,488 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால் 15,103 வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மார்ச்-15, 2022 ஆம் தேதி மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் மூலம் 1,558 கோடி ரூபாய் முதலீடுகள் வாயிலாக 600 வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
இந்நிலையில், சமீபத்தில், துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தகளின் மூலம் 6100 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அதன்மூலம் 14,700 வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும் என சொல்லப்படுகிறது. கடந்த 9 மாத கால தி.மு.க ஆட்சியில், 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம் 68,375.54 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,05,402 வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
source https://news7tamil.live/investments-attracted-by-the-government-of-tamil-nadu-in-10-months.html