இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, மற்றும் எரிபொருள் தட்டுபாடு காரணமாக தொடர் வன்முறை ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்புவில் முழு ஊரடங்கை மீறியதாக 644 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அத்துமீறி வெளியில் சுற்றித்திரிந்த 644 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து கொழும்புவில் உள்ள தாமரை தடாகத்தின் முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பி பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: மதுரையில் சித்திரைத் திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இந்நிலையில், இலங்கையில் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நேற்று இரவு முதல் முடக்கப்பட்டன. இது குறித்து இலங்கை தொலைதொடர்புகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யூடியுப், டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுவதாக தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/full-curfew-in-sri-lanka-public-struggle-in-various-places.html