ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

வகுப்புவாத வன்முறை; மவுனம் ஏன்? 13 கட்சித் தலைவர்கள் கூட்டாக கேள்வி

 16 4 2022 

இந்தியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டாக அறிக்கையில், உணவு, உடை , நம்பிக்கை, பண்டிகை மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்னையை தூண்டுகின்றனர்.

நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்பு வாத வன்முறையை கண்டிக்கிறோம். மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், “நாட்டில் வெறுப்பு பேச்சை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது.” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/india/communal-violence-in-india-13-oppn-leaders-questions-pms-silence-441827/

Related Posts:

  • News in Drops Read More
  • பீதியில் நெல்லை காவல்துறை.... பீதியில் நெல்லை காவல்துறை....வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தும் அவலம்.யார் இவர்களை (பாதிக்கப்பட்டவர்களை மட்டும்… Read More
  • மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத் மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இத… Read More
  • அமெரிக்கக் கண் மருத்துவரை கவர்ந்த இஸ்லாம் ======================================எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்… Read More
  • பெற்றோர்களே கவனம்.....! உங்கள் வீடுகளுக்கு கீரை விற்கவரும் முனியம்மாவாக இருந்தாலும் சரி, மாம்பழம் விற்கவரும் மயில்சாமியாக இருந்தாலும் சரி, கட்டடப் பணிக்கு வரும் மேசன் மகேசனா… Read More