P Chidambaram
மிகவும் ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை இழந்தவர்கள், மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோரின் குறைந்தபட்சத் தேவைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அறிவிக்க முடியாதது மத்திய அரசின் தோல்வியாக பார்க்கப் படுகிறது.
வரி, நலத்திட்டங்கள், வெற்றி என மூன்றையும் இணைக்கும் வழியைக் கண்டுபிடித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புத்திசாலித்தனத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இது தேர்தல் நிதி நன்கொடை பத்திரம், சலுகைசார் முதலாளித்துவம், ஊழல் போன்றவற்றை ஒருங்கிணைத்து சட்டப் பூர்வமாக தேர்தல் நிதி அளிப்பதற்கு வழி செய்துள்ளது.
முதல் அம்சத்தை எடுத்துக்கொண்டால் அது வரிகள் , நலத்திட்டங்கள் மற்றும் வாக்குகள் குறித்து விளக்குகிறது. 2019 ல் மீண்டும் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நடைமுறையில் இருந்த சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் GDP வளர்ச்சி நடவடிக்கைகள் வேலைகளை உருவாக்குதல் மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றை மோடி அரசு கைவிட்டுவிட்டது. கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததால் தான் இந்தியா அதை கைவிட்டு விட்டது. மாறாக மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு மாற்று வழியை மோடி அரசாங்கம் கண்டுபிடித்தது. கோவிட்-19 என்னும் தொற்று நோய் வந்ததால் தனது நடவடிக்கைகளை அரசால் நியாய படுத்தவும் முடிந்தது. மிகவும் ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை இழந்தவர்கள், மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோரின் குறைந்தபட்சத் தேவைகளுக்கு தேவையான நலத்திட்டங்களை அறிவிக்க முடியாதது மத்திய அரசின் தோல்வியாக பார்க்கப் படுகிறது.
நியாயமற்ற வரிக் கொள்கை
மோடி அரசாங்கம் விரிவுபடுத்தப்பட்ட நலத்திட்ட அரசியல் மற்றும் தேர்தல் வெகுமதிகளை கணக்கிட்டு அதில் கவனம் செலுத்த தொடங்கியது. அதனால் தான் இந்த நலத்திட்ட உதவி திட்டங்களுக்கு யார் நிதி தருவது என்ற கேள்வியும் எழுந்தது.
புதிய நலத்திட்ட நடவடிக்கைகளால் பயனடைய வேண்டிய ஏழைகளிடம் இருந்து அதற்கான பணத்தை வாரியாக பெறலாம். அதை அவர்களிடமிருந்தே பெற்று அவர்களுக்கே திருப்பி கொடுக்கலாம் என்று சிந்தித்தது தான் இந்த அரசின் புத்திசாலித்தனமான திட்டம். இந்த மாதிரியான சூழலில் சமத்துவத்தையும் நீதியையும் நிலை நிறுத்த பணக்காரர்களும், தொழில் நிறுவனங்களும் தான் அரசுக்கு அதிக வரி செலுத்த வேண்டும். அதிலிருந்தே ஏழைகளுக்கான புதிய நலத்திட்ட உதவிகளை அரசு செய்ய வேண்டும். ஆனால் மோடி அரசாங்கம் இதற்கு நேர்மாறாக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அது வரை வசூலிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி விகிதமான 22-25 சதவீதத்தை குறைத்து, புதிய முதலீடுகளுக்கு 15 சதவீத வரி விகிதத்தை அறிமுகப்படுத்தியது. தனிநபர் வருமான வரி விகிதத்தை 30 சதவீதமாக குறைத்தது. அந்த வருமான வரியில் 4 சதவீத கல்வி மற்றும் சுகாதார வரியையே கூடுதலாக விதித்தது. சொத்து வரி ரத்து செய்யப்பட்டது. பரம்பரையாக வந்த சொத்துக்களை பெறுவதற்கான வரியும் இன்னும் முறைப்படுத்தப்பட வில்லை.
அரசாங்கத்தின் முக்கிய வருவாய் என்பது ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை வரி மற்றும் எரிபொருள் மீதான பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகள் தான். இது ஒரு தங்க சுரங்கம் என்பது அரசுக்கு தெரியும். இங்கு தங்க சுரங்கத்தை தோண்ட கூட வேண்டாம். வரி செலுத்துபவர்கள் தாங்களே தங்கத்தை வெட்டி ஒப்படைப்பது போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தமக்கான எரிபொருள் வரிகளை செலுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.
மிரட்டி பணம் பறிக்கும் விகிதங்கள்
மோடி அரசு பதவியேற்ற போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி விகிதங்களையும், இன்றைய விலையையும், அத்தியாவசிய எரிபொருட்களின் விலைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மே 2014 இல் நிலவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 108 டாலராக இருந்தது. இந்த விலை உயர்வு நுகர்வோரிடம் வசூலிக்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் (2019-2021) கச்சா எண்ணெய் சராசரியாக பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 60 டாலராக இருந்தது. இது மத்திய அரசின் வருவாயில் பெட்ரோலியத் துறையின் வரி பங்களிப்பு அரசுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித் தந்திருக்கிறது. அது குறித்த ஒரு அட்டவணை :
மோசமான தினசரி ஊதியம்
இந்த தொகையில் பெரும்பகுதியை டீசல் பம்ப் செட் மற்றும் டிராக்டர் வைத்திருக்கும் விவசாயிகள், இருசக்கர வாகனம் மற்றும் கார் உரிமையாளர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் அன்றாடங்காச்சிகள் தான் செலுத்தி உள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில் லட்சக்கணக்கான நுகர்வோர் மத்திய அரசுக்கு எரிபொருள் வரியாக ரூ.4,55,069 கோடியை செலுத்தினர். இதில் மாநில அரசுகளுக்கு ரூ. 2,17,650 கோடி விற்பனை வாரியாக தரப்பட்டது. இந்தியாவின் 142 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ. 2314000 கோடியில் இருந்து ரூ. 5316000 ஆக அதிகரித்தது. அதாவது ரூ.23,14,000 கோடியிலிருந்து ரூ.53,16,000 கோடிக்கு இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்தது. இது கிட்டத்தட்ட ரூ.30,00,000 கோடி உயர்வு என்று சொல்லலாம்.
ஏழைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் பெருந்தொகையாக வரி வசூலித்து அந்தப் பணத்தை ஏழைகளுக்கு நலத்திட்டங்களாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. அந்த நலத்திட்டங்களை கூடுதல் நலத்திட்டங்கள் என்றும் மத்திய அரசு கூறிக் கொள்கிறது. கடந்த 2020 ம் வருடம் முதல் கூடுதல் நேரடி பலன் பரிமாற்றம் எவ்வளவு வழங்கப்பட்டது என்பதை நாம் கணக்கிடலாம். இலவச உணவு தானியமாக இரண்டு ஆண்டுகளில் ரூ. 2,68,349 கோடியும், பெண்களுக்கு ஒரு முறை ரொக்கப் பணமாக ரூ. 30,000 கோடியும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 என்ற அளவில் (ஆண்டுக்கு 50,000 கோடியும் அளிக்கப் பட்டுள்ளது. இது தவிர சில நேரடி ரொக்க உதவி திட்டங்களும் உண்டு. இவற்றையெல்லாம் கூட்டினாலும் ஆண்டுக்கு 2,25,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு இல்லை. இது மத்திய அரசு வசூலித்த எரிபொருள் வரி வருவாயை விட குறைவு. அதே நேரத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும், வருமானமும் கணக்கில் அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.
தமிழில் : த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-poor-pay-for-their-own-436147/