முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், தனது வீட்டில் நடந்த சோதனையில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய் மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அளித்த பேட்டியில், தனது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிரானது என்றும் அந்த சோதனையின் போது தன்னை துப்பாக்கி முனையில் வீட்டுக் காவலில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட வந்த போது அதற்குரிய சான்று ஆவணத்தை காட்டியதாகவும், ஆனால் அந்த சோதனைக்கான பேப்பரில் தனது பெயர் இல்லை என்றும் ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
தனது வீட்டில் ரகசிய அறை இருப்பதாக வருமான வரித்துறையினர் தகவல் பரப்பி உள்ளனர். அப்படி எந்த ரகசிய அறையும் எனது வீட்டில் இல்லை. எனது மகன் விவேக் இந்த வீட்டில் வசிக்கவில்லை. அவர் தனியாக வசிக்கிறார். எனவே எங்களை சேர்த்து சொல்வது தவறு. எனது மகனுக்கும் தமிழக அரசுக்கும் எந்த வர்த்தக தொடர்பும் கிடையாது.
என் மகனுக்கு எதிரான வாரண்டை வைத்து தலைமை செயலகத்துக்கு சென்று சோதனை நடத்தி இருக்கிறார்கள் என்றும் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : December 27, 2016 - 11:58 AM