What led to the 8.6% fall in Reliance Industries (RIL) shares? : இந்தியாவின் மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கும், அதிக சந்தை மூலதனம் கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கள் கிழமை அன்று 8.6% சரிந்தது. அதன் மொத்த சந்தை மதிப்பில் ரூ. 1.23 லட்சம் கோடி குறைந்து அல்லது 16.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து தற்போது 13.14 லட்சம் கோடியாக உள்ளது. வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ. 14.37 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் ரூ. 875 ஆக இருந்த சந்தை மத்ஹிப்பு 170% உயர்ந்து செப்டம்பர் மாதத்தில் அது 2,368 ஆக உயர்ந்தது. கடந்த 6 மாதங்களில் டெலிகாம் மற்றும் சில்லறை விற்பனை தளங்களில் உலக முதலீட்டாளர்களிடம் இருந்து 1.5 லட்சம் கோடி நிதியை திரட்டியதன் மூலம் அனைத்து லைம் லைட்டையும் பெற்றது இந்த நிறுவனம். கூர்மையான வீழ்ச்சி சிலருக்கு ஒரு தணிப்பாகவும் மற்றவர்களுக்கு வாய்ப்பாகவும் வருகிறது.
திங்கள் கிழமை அதன் சந்தை மதிப்பு குறைய காரணம் என்ன?
கொரோனா தொற்று மற்றும் அதனை தொடர்ந்து உருவான ஊரடங்கு காரணமாக சில்லறை வணிகத்தில் பலவீனம் ஏற்பட்டது. மேலும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு 5.7 டாலராக சரிந்ததன் விளைவாக செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் 15% சரிந்து ரூ. 9, 567 கோடியாக இருந்தது. பலவீனமான இரண்டாவது காலாண்டு முடிவுகளால் விற்பனையானது தூண்டப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பங்குகள் 187 சதவீதம் உயர்ந்து நிகர லாபம் ரூ.2,844 கோடியாக இல்லாமல் இருந்திருந்தால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபங்கள் மேலும் சரிந்திருக்கும். ஆப்பரேசன்களில் இருந்து ரிலையன்ஸிற்கு வரும் வருமானம் 22.29% குறைந்து ரூ. 1,28,385 கோடியாக இரண்டாம் காலாண்டில் உள்ளது. சுத்திகரிப்பு துறையில் தொடர்ச்சியான சரிவு தயாரிப்புகள் முழுவதும் இருந்த குறைந்த விரிசல் காரணமாக ஏற்பட்டது.
திங்களன்று ஏற்பட்ட வீழ்ச்சி, ஃபேரிடேலை முடிவுக்கு கொண்டு வருகிறதா?
ப்ரோகரேஜ் நிறுவனங்கள் அப்படி எதையும் உணரவில்லை. நிதி மேலாளர்கள் மற்றும் அனலிஸ்ட்கள், பங்குகள் மிகவும் மதிப்பு மிக்கதாக இருந்ததால் பலவீனமான காலாண்டு அவர்களுக்கு லாபங்களை பதிவு செய்ய ஒரு வாய்ப்பை கொடுத்தது என்று கூறுகிறார்கள். மேலும் நாள் முன்னேற்றத்தில் பங்குகளின் விலை மேலும் குறைய துவங்கியது.
குறைவான விமானப்போக்குவரத்து மற்றும் தயாரிப்பில் வெறும் 40% டீசலுக்கு மட்டுமே தேவை இருப்பதாலும் ரிஃபைனிங் ஜி.ஆர்.எம். மென்மையாக இருக்கும் என்று முன்னணி ப்ரோக்கரேஜ் நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். டீசலின் தேவை இப்போது இருப்பது போன்றே மூன்றாம் காலாண்டிலும் இருக்கும். டெலிகாம் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் அடிப்பையும் குறைய துவங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். எனவே அங்கு லாப பங்குகளுக்கு புதிய தூண்டுதல் இல்லாத காரணத்தால் லாப முன்பதிவுக்கு அது வழி வகுக்கிறது.
டெலிகாம் மற்றும் ரீட்டைல் வர்த்தகம் விரிவடைந்து வருவதாக பலரும் கூறுகின்றனர். கோவிட்19 பெருந்தொற்றால் ஏற்பட்ட ஒரு காலாண்டின் பலவீனத்தை மிகப்பெரிய அளவில் எடுத்துக் கொள்ள தேவையில்லை என்று பலர் நினைக்கின்றனர். உலக அளவில் எண்ணெய் வர்த்தகம் பலவீனமாக இருக்கும் போது தற்போதையை வீழ்ச்சி மற்றும் பலவீனமான முடிவுகளை ஒருவர் ஆழ்ந்து படிக்க கூடாது என்று மியூச்சுவல் ஃப்ண்ட் ஒன்றில் இருக்கும் மேலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை இது வழங்குகிறதா?
ஒரு பங்கின் விலை ரூ. 2300-ஐ எட்டிய போது அதில் பங்குகளை வாங்கமல் விட்டுவிட்டோமே என்று பலரும் யோசித்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போதைய வீழ்ச்சி, நீண்ட கால லாபங்களுக்குகாக பங்குகளை வாங்க புதிய வாய்ப்புகளை இது வழங்குகிறது என்று வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார். மேக்யூரி போன்ற உலகளாவிய முதலீட்டு நிறுவனங்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மேலும் 42% குறையக் கூடும் என்று கூறும் நிலையில் சிலர் பங்குகள் உயர புதிய தூண்டல்கள் ஏதும் இல்லை எனவே பங்குகள் இப்படியே இருக்கும். எனவே ரிலையன்ஸின் பங்குகளை வாங்கு விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.