ஞாயிறு, 17 மார்ச், 2024

ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்; ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை

 ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்; ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை 17 3 24 

18 ஆவது மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) வெளியிடப்பட்டது.

தற்போதைய 17 ஆவது மக்களவையின் (லோக் சபா) பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக புதிய மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே 18 ஆவது மக்களவை பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையர்கள் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். மேலும், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். மறுபுறம் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று (மார்ச் 16) மாலை 3 மணிக்கு, 18 ஆவது மக்களவைக்கானத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அதன் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக தேர்தல் ஆணைய அலுவலகமான டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/lok-sabha-election-2024-full-schedule-live-updates-in-tamil-4357177