வெள்ளி, 22 மார்ச், 2024

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது | ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!

 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதலமைச்சர்  கெஜ்ரிவால் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர். இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மாலை சென்ற நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சம்மனுக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

source https://news7tamil.live/delhi-chief-minister-arvind-kejriwal-arrested-aam-aadmi-party-protest.html

Related Posts:

  • கிரகண தொழுகை முறை 26/04/2013 இன்ஷா அல்லாஹ் இன்று இரவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. தமிழ்நாட்டில் நள்ளிரவு 1.10 யில் இருந்து 1.50 வரை தெரியும் என்று அறிவித்து உள்ளார்கள… Read More
  • Dubai police show off Ferrari DUBAI: Dubai police on Thursday showed off a new Ferrari they will use to patrol the city state, hot on the heels of a Lamborghini which joined the… Read More
  • Become Online Programmer ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம். புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவ… Read More
  • இஸ்லாத்தை தழுவிய கொரியாவை சேர்ந்த சகோதரி கொரியாவை சேர்ந்த சகோதரி இஸ்லாத்தை படித்து விளங்கி ஹாங்காங்கில் இஸ்லாத்தை தழுவிய பொழுது மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விடும் சகோதரி .வெல்கம் சிஸ்டர்… Read More
  • Islam Read More