சனி, 23 மார்ச், 2024

மாஸ்கோ மீதான பயங்கரவாத தாக்கு

 22 3 2024 

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கச்சேரி அரங்கிற்குள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த பயங்கரவாத  தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க உளவுத் துறை அதிகாரி ஒருவர் தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்த குழுவின் கிளை மாஸ்கோவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நாங்கள் அறிந்தேன். இந்த தகவலை  நாங்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலில் கச்சேரி அரங்கின் கூரை இடிந்து விழுந்து தீப்பிடித்தது. இந்த தாக்குதல் ரஷ்யாவில் நடந்த மிகவும் கொடூரமான, மோசமான தாக்குதல் என்று கூறியுள்ளனர். உக்ரைன் உடனான போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அண்மையில்  ரஷ்யா அதிபராக புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் இந்த தாக்குதலை "பெரிய சோகம்" என்று அழைத்தார். ரஷ்யாவின் பிக்னிக் என்ற ராக் இசைக்குழு நேற்று மாஸ்கோவில் உள்ள அரங்கில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாள தெரியாத குழு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மாநில குற்றப் புலனாய்வு அமைப்பான புலனாய்வுக் குழு சனிக்கிழமை அதிகாலையில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறிவித்தது. காயமடைந்த 145 பேரின் பட்டியலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டனர். 

இதில் 115 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 குழந்தைகளும் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. 

source https://tamil.indianexpress.com/india/pm-modi-condemns-moscow-concert-attack-4406036