வெள்ளி, 22 மார்ச், 2024

தி.மு.க கூட்டணி : நாமக்கல் தொகுதிக்கான வேட்பாளர் மாற்றம்

 நாமக்கல் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்  சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரன்  போட்டியிட உள்ளார்.

வருகின்ற மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி மாநில செயலாளராக  இருந்த சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சூரியமூர்த்தி சாதிரீதியாக பேசிய பழைய வீடியோ சமூகவலைதளங்களில் பரவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள வந்தன. இதனால் கொங்கு நாடு மக்கள் தேசிய  கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில்  நாமக்கல் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூரியமூர்த்திக்கு பதிலாக, கொங்கு நாடு மக்கள் தேசிய  கட்சியின், நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-alliance-namakkal-constituency-candidate-changed-4400935