24 3 24
நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள இந்த 4வது பட்டியலில், மொத்தம் 45 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடித்து வருகின்றது. மயிலாடுதுறையில் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவரும் விருப்பம் தெரிவித்துள்ளார். அதே இடத்துக்கு ஏற்கனவே எம்பியாக இருந்த மணிசங்கர் ஐயரின் வாரிசுக்கு விருப்பம் இருக்கின்றது.
அதேபோல் பட்டுக்கோட்டை சார்ந்த ராஜேந்திரன் என்பவர் மண்ணின் மைந்தர்களை வைத்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அதேபோல் திருச்சியில் சீட்டு மறுக்கப்பட்ட திருநாவுக்கரசருக்கும் அதீத விருப்பம் இருப்பதால் மயிலாடுதுறை, நெல்லை இதில் ஏதாவது ஒன்றாவது கொடுங்கள் என அழுத்தம் கொடுப்பதால் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கின்றது.
இது தவிர, அஸ்ஸாம், அந்தமான் & நிகோபார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் க.சண்முக வடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/the-list-of-7-congress-candidates-has-been-announced-in-tamil-nadu-4409066