சனி, 23 மார்ச், 2024

இ.டி., ஐ.டி. சோதனையில் சிக்கிய 41 நிறுவனங்களிடம் இருந்து ரூ.2,471 கோடி நன்கொடை

 தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்த மனுதாரர்களில் ஒருவரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்சிபிஐஇடி மற்றும் ஐடி துறையால் விசாரணையை எதிர்கொண்டுள்ள 41 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ.2,471 கோடியை பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கியதாக வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார்.

மேலும் இதுகுறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.

இதில், 1,698 கோடி ரூபாய் இந்த ஏஜென்சிகளின் ரெய்டுகளுக்குப் பிறகு நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும்ரெய்டுக்குப் பிறகு மூன்று மாதங்களில் மட்டும் 121 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நன்கொடையாளர்களை பெறுநர் கட்சிகளுடன் இணைக்கும்தனிப்பட்ட பத்திர எண்களுடன் (unique bond numbers) புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஒரு நாள் கழித்து செய்தியாளர்களிடம் பேசிய பூஷன்பத்திரங்களை வாங்கிய 33 நிறுவனங்களின் குழுக்கள், 172 பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து திட்ட ஒப்புதல்களை, பெற்றுள்ளன.

பாஜகவுக்கு ரூ.1,751 கோடி தேர்தல் பத்திர நன்கொடைகளுக்கு ஈடாக, இந்த நிறுவனங்கள்திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் ரூ.3.7 லட்சம் கோடி பெற்றுள்ளனர்,

குறைந்தது 49 வழக்குகளில்ரூ.62,000 கோடி போஸ்ட்பெய்ட் ஒப்பந்தங்கள்/திட்ட அனுமதிகள் மத்திய அல்லது பாஜக தலைமையிலான மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ளனஇதற்காக பாஜக மூன்று மாதங்களுக்குள் ரூ.580 கோடி  பத்திரங்கள் வடிவில் பெற்றது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தில் பாதிக்கும் மேற்பட்டவை லஞ்சமாகஒப்பந்தங்களை வழங்குவதன் மூலமும், ED மற்றும் CBI மீதான பயத்தைக் காட்டுவதன் மூலமும் பெறப்பட்டதாக தகவல் உள்ளது.

இந்த முத்தரப்பு சதியை விசாரிக்க சுதந்திரமான சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் கோரினார்.

தேர்தல் பத்திரங்களைக் கொடுத்து ஒப்பந்தங்களைப் பெற்ற நிறுவனங்கள், இதன்மூலம் ED, IT மற்றும் CBI ஆகியவற்றின் பிடியிலிருந்து விலகிய நிறுவனங்கள்இந்த சதியில் ஈடுபட்ட அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும்என்று அவர் கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/prashant-bhushan-fear-of-ed-cbi-bribe-for-contracts-bonds-a-tripartite-conspiracy-4406188