27 03 2024
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கண்ணக்கரை வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டு தீயினால் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சோத்துப்பாறை அணைக்கு மேல் கண்ணக்கரை வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று (மார்ச்.26) மாலை சிறிய அளவில் காட்டு தீ பரவியது. இந்த நிலையில் காற்றின் வேகம் அதிகமானால் காட்டு தீ மளமளவென பற்றி எரிய தொடங்கி, பெரிய அளவில் பரவியுள்ளது.
இந்த காட்டுத் தீ, 200 ஏக்கருக்கும் அதிகமான இடங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து, வனப் பகுதியில் இருந்த விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் இந்த காட்டு தீயால் சிறிய வகை வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. கோடைகாலம் துவங்கிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் தொடர்ந்து காட்டு தீ ஏற்பட்டு வருகிறது.
source https://news7tamil.live/forest-fire-in-the-western-ghats.html