அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
source https://news7tamil.live/election-manifesto-of-aiadmk-key-features.html
1) ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
2) உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
3) குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
4) தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
5) தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
6) சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
7) பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்.
8) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
9) நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை கொண்டுவர வலியுறுத்தப்படும்.
10) வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.
11) பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்குவோம்.
12) குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.