சனி, 30 மார்ச், 2024

ரம்ஜான் பண்டிகை: பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம்

 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 1-9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.

10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. 1-9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன் தேர்வுகளை முடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. 

அதன்படி ஏப்ரல் 12-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்று, ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் எனக் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், இடையில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தேர்வு தேதிகளை மாற்றி அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்படி, தற்போது அறிவியல், சமூக அறிவியல் தேர்வுக்கான தேதிகளை மாற்றி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு  ஏப்ரல் 22-ம் தேதிக்கும், ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23-ம் தேதிக்கும் மாற்றி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ரம்ஜானையெட்டி உருது பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


source https://tamil.indianexpress.com/education-jobs/ramzan-tn-school-exams-rescheduled-4433416