சனி, 30 மார்ச், 2024

தேர்தலில் போட்டியிட பணம் இல்லையா? 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரம் என்ன ஆனது? நிர்மலா சீதாராமனுக்கு, ஸ்டாலின் பதிலடி

 தருமபுரி மாவட்டம்தடங்கம் பகுதியில் இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டம் வெள்ளிக் கிழமை (மார்ச் 29) நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை அறிமுகப்படுத்திபிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ’நேற்று ஒரு செய்தி பார்த்தேன். நம்முடைய மக்களுக்கு வெள்ள பாதிப்பின்போதுநிவாரணம் கொடுத்ததைப் பிச்சை என்று சொன்னாரேமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்அவர் பேசிய செய்தி. இவர்கள் பிச்சை என்று சொன்னதும்நான் என்ன சொன்னேன்அவரைஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள். மக்கள் உங்களுக்குச் சொல்லும் பதிலில், ’பிச்சை’ என்ற சொல்லே இனி உங்கள் ஞாபகத்துக்கு வராது என்று சொன்னேன்.

ஆனால்வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணம்தான் சூப்பர். தேர்தலில் போட்டியிட அவரிடம் பணம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். சொல்வது யார்சாதாரண மக்களின் பேங்க் பேலன்ஸ் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கிறவர்கள் சொல்கிறார்கள். இவரிடம் பணம் இல்லை என்றால் 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரமாக வாங்கி பாஜக வேட்பாளர்கள் நிற்கிறார்களேஅந்தப் பணம் என்ன ஆனதுஉங்களுக்குத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா?

தேர்தலில் போட்டியிட மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கத் தெரிய வேண்டும். மக்களைப் பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும். உங்களுக்கே தெரிந்துவிட்டது. தேர்தலில் நின்றால்மக்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றுதப்பிவிட்டீர்கள்.

தமிழக மக்கள் 2019 தேர்தலைப் போன்றுஇந்தத் தேர்தலிலும் பாஜகவை ஒதுக்கத்தான் போகிறார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாகமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ’தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் அது குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து போட்டியிட எனக்கு பரிந்துரை வந்தது. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இதனை முன்மொழிந்தார். இருந்தும் நான் போட்டியிடவில்லை என சொன்னேன்.

மேலும்என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு போதுமான பணம் இல்லை. அதோடு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம்சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும். அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது’ எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/lok-sabha-elections-2024-dmk-mk-stalin-nirmala-sitharaman-bjp-4433330