தமிழகத்தை நோக்கி.. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையில் அடுத்த இரண்டு நாட்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னைக்கு அக்.16-ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.