ஃபீஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும் தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) நள்ளிரவு புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பின்னரும், புயலின் தாக்கத்தால் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் 48 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
ஃபீஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழந்துள்ளது. ஃபீஞ்சல் புயல் வலுவிழந்தாலும், தமிழ்நாட்டில் டிசம்பர் 2 (திங்கட்கிழமை), டிசம்பர் 3 (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, இன்று (02.12.2024) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல, நாளை (03.12.2024) திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/fengal-cyclone-heavy-rain-announced-to-13-districts-rain-continue-further-two-days-7663950