இந்தியாவில் எச்.எம்.பி.வி வைரஸ்: பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு தொற்று உறுதி 7 1 25
அண்டை நாடான சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி. எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவத் துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் பலர் முக கவசம் அணிந்து காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை இந்தியாவில் முதல் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. 8 மாத குழந்தைக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்.எம்.பி.வி வைரஸ் உறுதியாகியுள்ள குழந்தை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவில்லை என்று கர்நாடகா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனா உட்பட பல நாடுகளில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்கள் மூலம் நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் நிலைமை குறித்த சரியான நேரத்தில் பகிருமாறு உலக சுகாதார நிறுவனத்தை கோரியுள்ளது.
கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, 'எச்.எம்.பி.வி வைரஸ் என்பது பொதுவாக சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். பெரும்பாலானவை லேசான பாதிப்பை கொண்டுள்ளன. ஆனால் சிறு குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடியது அபாயம் உள்ளது. இந்த வைரஸ் பொதுவானது என்றாலும், 5 வயதாகும் முன்பே அதைப் பெறுகிறார்கள்' என்று தெரிவித்துள்ளது
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் சுவாச நோய்களில் சுமார் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை எச்.எம்.பி.வி வைரஸ் மூலம் ஏற்படுகிறது. பெரும்பாலான நிகழ்வுகள் லேசானவை. ஆனால் 5% முதல் 16% குழந்தைகள் நிமோனியா போன்ற குறைந்த சுவாசக் குழாய் தொற்றுகளை உருவாக்கும்.
இந்தியாவில் எச்.எம்.பி.வி வைரஸ் இருப்பது இது முதல் முறை அல்ல. வைராலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட 2015 ஆய்வில், எச்.எம்.பி.வி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 67 சதவீதம் பேர் 2-24 மாதங்களுக்குள் உள்ளனர்.
எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும், இது 2001 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் அது குளிர்காலத்தில் இளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பருவகால வைரஸ் நோயாக அறியப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/hmpv-virus-in-india-8-month-old-baby-tests-positive-in-bengaluru-hospital-amid-surge-in-cases-in-china-tamil-news-8594794