திங்கள், 6 ஜனவரி, 2025

சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை வசதி திட்டம்; தொடங்கி வைக்கிறார் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

 6/1/25

TN Transport minister SS Sivasankar on Bike Taxi Tamil News

சென்னை மாநகர பேருந்துகளில் நாளை முதல் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் நாளை முதல் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பல்லவன் பணிமனையில் மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை பயன்படுத்தும் திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார். 

சென்னையில் பொதுமக்கள் மின்சார ரெயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகிய போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 'சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம்' மெட்ரோ ரெயில் சேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக நாளை முதல் சென்னை மாநகர பேருந்துகளிலும் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன்படி. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பல்லவன் பணிமனையில் மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மின்சார ரெயில்களிலும் ஸ்மார்ட் அட்டை வசதியை பயன்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


source